Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தைகளை மகிழ்விக்க வரும் ரியோ 2

Webdunia
ஞாயிறு, 30 மார்ச் 2014 (23:50 IST)
குழந்தைகளையும், பெரியவர்களையும் மகிழ்விக்க ஏப்ரல் 11 ஆம் தேதி அனிமேஷன் படமான ரியோ 2 வெளியாகிறது.
ரியோ 2011 ல் வெளியானது. டுவென்டியத் சென்சுரி ஃபாக்ஸ் அனிமேஷனும், ப்ளூ ஸ்கை ஸ்டுடியோஸும் இணைந்து தயாரித்த இந்தப் படம் உலகம் முழுவதும் மொத்தமாக 486 மில்லியன் டாலர்களை 
 
வசூலித்தது. அதில் யுஎஸ்ஏ தவிர்த்து மட்டும் 341 மில்லியன் டாலர்கள்.
 
ரியோவுக்கு யுஸ்ஸுக்கு வெளியே இருந்த வரவேற்பு காரணமாக அதன் இரண்டாம் பாகத்துக்கு சர்வதேச அளவில் விளம்பரங்களை முடுக்கி விட்டுள்ளனர். கடந்த இருபதாம் தேதி ரஷ்யா, கசகஸ்தான் 
 
உள்ளிட்ட சில தேசங்களில் ரியோ 2 வெளியானது. சில தினங்களில் பத்து மில்லியன் டாலர்களைத் தாண்டி வசூலிக்கவும் செய்தது. 27 ஆம் தேதி படம் பிரெசிலில் வெளியானது. நான்காம் தேதி யுகே யில். 11 
ஆம் தேதி யுஎஸ்ஏ, இந்தியா உள்பட பல நாடுகள்.
 
முதல் பாகத்தைவிட இரண்டாவது பாகம் சிறப்பாக இருப்பதாகவும் முக்கியமாக இசைக்கு அதிக முக்கியத்துவம் தந்திருப்பதாகவும் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
 
ரியோ 2 இந்த கோடையில் குழந்தைகளை மகிழ்விக்க சரியான சாய்சாக இருக்கும்.

தனி ஒருவன் 2 ப்ரோஜக்ட் கை விட்டு போயும் இயக்குனருக்கு ஹாப்பிதான்..! அஜித் தான் காரணம்!.

இயக்குனர் பா.ரஞ்சித் மீது போலீசில் புகார்.. சாதி மோதலை தூண்டுகிறார் என குற்றச்சாட்டு..!

தஞ்சாவூர் பிண்ணனியில் 90ஸ் காலத்து கதை! – கார்த்தியின் ‘மெய்யழகன்’ ஃபர்ஸ்ட்லுக்!

தனுஷின் ‘ராயன்’ படத்தின் ‘வாட்டர் பாக்கெட்’ பாடல்.. செம்ம வைரல்..!

இதெல்லாம் நடக்குற காரியமாங்க..! ஏ.வி.எம் நிறுவனத்திற்கு எம்.ஜி.ஆர் விட்ட சவால்..!

Show comments