Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

என்னுடைய படத்தை போப் பிரான்சிஸ் பார்ப்பாரா?

என்னுடைய படத்தை போப் பிரான்சிஸ் பார்ப்பாரா?
, புதன், 26 பிப்ரவரி 2014 (15:10 IST)
பக்தி வியாபாரம் உலகம் முழுவதும் 365 நா‌ட்களும் நடக்கிற சங்கதி. ஹாலிவுட்டின் பக்தி வியாபாரத்தை குறித்து தனி புத்தகம் போடலாம். ஈஸ்டர் திருநாள் வருவதையொட்டி ஹாலிவுட்டில் அடுத்த மாதமே சன் ஆஃப் காட் படத்தை வெளியிடுகின்றனர்.
FILE

அடுத்த மாதம் 28 ஆம் தேதி நோவா வெளியாகிறது.

மக்கள் பாவிகளாக இருப்பதைப் பார்த்து கோபப்படும் கடவுள் தொடர்ச்சியாக மழை பெய்ய வைத்து பூமியை தண்ணீரால் மூழ்கடிப்பார். விசுவாசியான நோவாவும் அவரது குடும்பமும் மட்டும் தப்பிக்கும். விலங்குகளையும், பறவைகளையும் தன்னுடைய பெரிய கப்பலில் நோவா காப்பாற்றி தண்ணீர் வடிந்ததும் பூமி மீண்டும் அதன் இயக்கத்துக்கு திரும்ப உதவுவார்.

இந்த பைபிள் கதையை படமாக்கியிருக்கிறார்கள். நோவாவாக நடித்திருப்பது ரஸல் க்ரோவ். மற்ற பக்திப் படங்களில் ஒன்றாக நோவாவை கருத முடியாது. படத்தை இயக்கியிருப்பவர் தி ரெஸ்ட்லர், பிளாக் ஸ்வான் போன்ற சிறந்த படங்களை தந்த டேரன் அரோனோஃப்ஸ்கி.
webdunia
FILE

2010ல் பிளாக் ஸ்வான் வெளியான பிறகு 2014ல் அடுத்த மாதம்தான் அவரின் அடுத்தப் படம் - நோவா - வெளியாகிறது. வழக்கமான பக்தி வியாபாரத்திலிருந்து இது வித்தியாசப்பட்டிருக்கும் என நம்பலாம்.

இந்தப் படத்தை புரமோட் செய்துவரும் ரஸல் க்ரோவ் தனது ட்விட்டரில் இப்போதைய போப் பிரான்சிஸ் நோவாவை பார்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். வாடிகனின் பார்வை விழுந்தால் கலெக்சன் கன்னாபின்னாவென்று எகிறும். வாடிகனும் இதுபோன்ற படங்கள் கிறிஸ்தவத்தை பலப்படுத்தவும், பரவச் செய்யவும் உதவும் என நம்புகிறது.

எனவே ரோமின் ஆசிர்வாதம் நோவாவுக்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil