Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியாவில் 1.8 கோடி லாபம் சம்பாதித்த ஹாலிவுட் காதல் படம்

இந்தியாவில் 1.8 கோடி லாபம் சம்பாதித்த ஹாலிவுட் காதல் படம்
, புதன், 9 ஜூலை 2014 (15:14 IST)
த ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ் (The Fault In Our Stars)  திரைப்படம் இந்தியாவில் முதல் மூன்று தினங்களிலேயே தயாரிப்பாளர்களுக்கு 1.8 கோடி லாபம் சம்பாதித்து தந்துள்ளது.
 
த ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ் எழுத்தாளர் ஜான் கிரீன் எழுதிய நாவல். அதனை அதே பெயரில் தழுவி படத்தை எடுத்துள்ளனர். 16 வயதான கேன்சரால் பாதிக்கப்பட்ட இளம் பெண் பெற்றோர்களின் வற்புறுத்துதலின் பேரில் ஒரு உதவிக்குழுவை சந்திக்கிறாள். அந்த சந்திப்பு அவளுக்கு ஒரு காதலை பெற்றுத் தருகிறது.
ஃபீல்குட் வகையைச் சேர்ந்த இந்தப் படம் யுஎஸ்ஸில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த வாரம் யுஎஸ் பாக்ஸ் ஆஃபிஸில் பதினோராவது இடத்தைப் பிடித்துள்ள இப்படம் இதுவரை 115.8 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது.
 
இந்தியாவில் முதல் மூன்று தினங்களில் 2.6 கோடிகளை வசூலித்தது. அதில் தயாரிப்பாளர்களுக்கு கிடைத்தது 1.8 கோடி.
 
வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil