Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்விக்கூடத்தை திறந்த ஏஞ்சலினா ஜோலி

ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்விக்கூடத்தை திறந்த ஏஞ்சலினா ஜோலி
, செவ்வாய், 2 ஏப்ரல் 2013 (15:28 IST)
ஏஞ்சலினா ஜோலி தான் ஒரு நடிகையை என்பதையும் தாண்டி நல்ல மனம் படைத்தவர் என்பதை அவ்வப்போது நிரூபித்து வருகிறார். அனாதை குழந்தைகளை தத்தெடுத்து அவர்களுக்கான செலவுக்கு பணம் தருவதுடன் நிறுத்திக் கொள்கிறவர்கள் மத்தியில் அந்தக் குழந்தைகளை தனது குழந்தைகளுடன் ஒரே வீட்டில் வளர்த்து வருகிறார்.
FILE

போரால் சொந்த நாட்டில் அகதிகளாக்கப்பட்டவர்களின் நலனில் அக்கறை செலுத்தி வருகிறவர் ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கென்றே தனி கல்விக்கூடத்தை உருவாக்கியுள்ளார். இதில் 200 க்கும் அதிகமான பெண்கள் படிக்கிறார்கள்.

பெண்கள் படிக்கக் கூடாது மீறினால் தண்டனை என்று கற்கால கொள்கையுடன் செயல்படும் தாலிபன்களின் இடத்தில் இப்படியொரு பள்ளியை ஜோலி திறந்திருப்பது அசாதாரணம். காபூலுக்கு வெளியே போரால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமிருக்கும் இடத்தில் இந்தப் பள்ளி திறக்கப்பட்டுள்ளது. இதைப் போல் மேலும் பல பள்ளிகளை ஆப்கானில் திறக்க உள்ளார் ஜோலி.

ஜோலி தானொரு ஹீரோயின் என்பதை சினிமாவுக்கு வெளியே அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil