Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அவங்க ஸ்டைலுக்கு நான் அடிமை

அவங்க ஸ்டைலுக்கு நான் அடிமை
, வியாழன், 24 ஏப்ரல் 2014 (17:46 IST)
இதே விஷயத்தை நாகரிகமான வார்த்தைகளில் சொல்லியிருக்கிறார் ஹாலிவுட் நடிகர் ஜாமி ஃபாக்ஸ்.
 
ஜாங்கோ அன்செயின்டு படத்துக்குப் பிறகு ஜாமி ஃபாக்ஸை அறிந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அந்த பிரபலம் விரைவில் மேலும் அதிகரிக்க உள்ளது. படம் தி அமேஸிங் ஸ்பைடர்மேன் 2.
இந்தப் படத்தில் எலெக்ட்ரா எனப்படும் மேக்ஸ் டில்லான் வில்லன் கதாபாத்திரத்தில் ஜாமி ஃபாக்ஸ் நடித்துள்ளார். இந்தியில் இப்படம் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜாமி ஃபாக்ஸுக்கு இந்தியில் குரல் தந்திருப்பவர் விவேக் ஓபராய். ஓபராய் ஜாமியின் ரசிகர்.
 
ஜாமியும், நடிகை ஹாலே பெர்ரியும் நண்பர்கள். டை அனதர் டே படத்தில் பிகினியில் கடலில் குளித்து நிமிர்ந்த நடையுடன் கரையேறி வரும் அந்த கறுப்பு தேவதைதான் ஹாலே பெர்ரி. அவரை இப்போது பார்த்தாலும் மனம் தடுமாறிப் போகிறது, அவரது ஸ்டைல் முதற்கொண்டு அனைத்தும் எனக்குப் பிடிக்கும் என்று மீண்டும் கூறியுள்ளார் ஜாமி. மீண்டும் என்று சொல்ல காரணம், இதே விஷயத்தை முன்பும் அவர் கூறியிருக்கிறார்.
 
ஜாமிக்கு ஒரு உண்மை தெரியவில்லை. அவர் மட்டுமில்லை, ஹாலே பெர்ரியை பார்க்கும் எவரும் எப்போதும் தடுமாறித்தான் போவார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil