Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குலதெய்வங்கள் வழிபாடு முக்கியம் என கூறப்படுவதேன்...?

Webdunia
நம் குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் என்று கூரப்படுகிறது. தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும். குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினை தரும். மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும். 

குலதெய்வம் பெரும்பாலும் சிறுதெய்வமாகவே காணப்படும். சிறு தெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது. அதன் சக்தியை அளவிடமுடியாது எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை  எடுக்கமுடியும். குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும்.
 
அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை. எனவே தான் அந்த தெய்வங்கலை நாம் குலதெய்வங்கள் என்று சிறப்புடன்அழைக்கப்படுகின்றன.குலதெய்வங்கள் கர்மவினைகளை நீக்க வல்லவை.
 
குலதெய்வ சன்னிதியில்  சென்று நாம் நிற்கும் போது, பிரத்யேகமாக வெளிப்படும் அந்த சக்தியை தொழும் போது, நம் முன்னோர்கள் பித்ருக்களாக இருந்து நம்மை ஆசிர்வாதிக்கிறார்கள்.
 
திருமணத்திற்கு முன் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குபவர்கள் திருமணம் முடிந்தவுடன் கணவனின் வீட்டில் உள்ள குலதெய்வத்தை வணங்க ஆரம்பிக்கிறார்கள். ஆனால் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வழிபடுவது, அவர்களை புகுந்த வீட்டில்  எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ வழிவகுக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிசம்பர் 2024 மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – கன்னி! | December 2024 Monthly Horoscope| Kanni | Pisces

டிசம்பர் 2024 மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – கும்பம்! | December 2024 Monthly Horoscope| Aquarius | Kumbam

டிசம்பர் 2024 மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – மகரம்! | December 2024 Monthly Horoscope| Magaram | Capricorn

டிசம்பர் 2024 மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – தனுசு! | December 2024 Monthly Horoscope| Dhanusu | Sagittarius

டிசம்பர் 2024 மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – விருச்சிகம்! | December 2024 Monthly Horoscope| Viruchigam | Scorpio

அடுத்த கட்டுரையில்
Show comments