கோவிலுக்கு செல்லும்போது அசைவ உணவுகளை தவிர்ப்பது ஏன்?

Webdunia
கோவிலுக்குச் செல்லும்போது சுத்தமாகச் செல்ல வேண்டும் என்று கூறுவது உடலுக்கு மட்டுமல்ல, மனதிற்கும் பொருந்தும். மனதளவில் மந்தநிலையில் உள்ள ஒருவர் சூட்சும சக்திகள் நிலவும் கோவிலுக்குள் செல்லும்போது அந்த சக்திகளை உணரக்கூடிய ஆற்றலை இழந்து விடுகிறார்.
அசைவ உணவுகள் ஜீரணமாக அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் என்பதால் அது உடலில் மந்தநிலையை ஏற்படுத்தும். பொதுவாக அசைவ உணவுகள் சூட்சும சக்தியை உணரும் ஆற்றலைக் குறைக்கும் தன்மை படைத்தவை. பொதுவாகவே உணவுக்கும், மனதிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. உணவு அதிகமாக  சாப்பிட்டால் தூக்கம் வருவதும், உணவில் காரம் சேர்த்து சாப்பிட்டால் கோபம் வருவதும் இதற்கு உதாரணமாக கூறலாம்.
 
எனவேதான், கோவிலுக்குச் செல்லும்போது எளிமையான உணவை மிதமான அளவில் உண்டு, மனதில் உற்சாகத்துடன் இறைவனை தரிசிக்கச் செல்ல வேண்டும் என முன்னோர்கள் வரையறுத்துள்ளனர். ஒருவேளை அசைவ உணவைச் சாப்பிட்ட பின்னர் கோவிலுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால், சாப்பிட்ட 3 அல்லது 4 மணி நேரத்திற்குப் பின்னர் குளித்துவிட்டு கோவிலுக்குச் செல்வது நல்லது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருவண்ணாமலை கிரிவலம்: இந்த மாத பௌர்ணமிக்கான உகந்த நேரம் அறிவிப்பு!

ஞானம், கல்வி அருளும் கும்பேஸ்வரர்: கும்பகோணம் ஆலயச் சிறப்புகள்!

திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோயில்: நாய் வாகனமில்லா யோக பைரவர் தரிசனம்

மலைபோன்ற சிக்கல்களை தீர்க்கும் கரியமாணிக்கப் பெருமாள் திருத்தலம்!

திருப்பதி வைகுண்ட துவார தரிசனம்: 10 நாள் வழிகாட்டுதல்கள் வெளியீடு – சலுகைகள் ரத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments