Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பித்ருக்களின் ஆசீர்வாதம் குடும்பத்திற்கு பரிபூரணமாக கிடைக்க என்ன செய்யவேண்டும்...?

Webdunia
செவ்வாய், 28 ஜூன் 2022 (12:35 IST)
முன்னோர் வழிபாடு என்பதும், குலதெய்வ வழிபாடு என்பதும் மிக மிக முக்கியம். முன்னோர்களுக்கு ஒரு வருடத்துக்கு 96 தர்ப்பணங்கள் செய்ய வேண்டும் என்கிறது தர்ம சாஸ்திரம்.


மாதந்தோறும் வருகிற அமாவாசை, ஒவ்வொரு தமிழ் மாதப்பிறப்பு, கிரகண காலங்கள், திதி, புரட்டாசி மகாளய பட்சத்தின் பதினைந்து நாட்கள் என 96 தர்ப்பணங்கள் செய்ய வேண்டும்.

பித்ரு காரியங்களை எவரொருவர் தொடர்ந்து முறையே செய்து வருகிறாரோ அவர்களும், அவர்களின் வம்சத்தினரும் பித்ரு சாபத்தில் இருந்தும், பித்ருக்களின் கோபத்தில் இருந்தும் விடுபடுவார்கள். பித்ருக்களின் ஆசீர்வாதம் அவர்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும்.

சில குடும்பங்களில், பரம்பரை பரம்பரையாக கொடிய வினைகள் சூழ்ந்து நிம்மதி குறைந்து போகும். எல்லா சுப காரியங்களிலும் தடைகள் ஏற்படும் குடும்பங்களில் விபத்துக்களும் அகால மரணங்களும் கூட நிகழும். இதுபோன்ற கொடிய பாவங்கள் தீர கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி நாளில் பிதுர் தேவதைகளை வணங்க வேண்டும்.

கடற்கரை, ஆற்றங்கரை அல்லது நீர்நிலை உள்ள தலங்களுக்கு சென்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். குலதெய்வ வழிபாடு முக்கியம். இன்றைக்கு காலதேவனை நினைத்து எம தர்ப்பணம் கொடுப்பது விசேஷமானது. இதன் மூலம் ஆயுள் தோஷம் நீங்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உத்திரகோசமங்கை கோவில் கும்பாபிஷேகம்: மரகத நடராஜர் தரிசனம்..!

பழனியில் தொடங்கியது பங்குனி உத்திரம் திருவிழா.. முருகனுக்கு சிறப்பு அபிஷேகம்..!

குச்சனூர் சனீஸ்வரன் கோவிலில் சனிப்பெயர்ச்சி வழிபாடு.. சிறப்பு பேருந்துகள்..

இந்த ராசிக்காரர்களுக்கு படிப்பில் மிகுந்த கவனம் தேவை! - இன்றைய ராசி பலன்கள் (29.03.2025)!

நாளை சூரிய கிரகணம்.. பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி உண்டா?

அடுத்த கட்டுரையில்
Show comments