Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதற்கான காரணம் என்ன...?

Webdunia
கிருஷ்ண பரமாத்மா நரகாசுரனை வதைத்த தினத்தையே தீபாவளி என கொண்டாடுகிறோம். பூமாதேவியின் மகனான நரகாசுரன் மனிதர்களை பெரிதும் துன்புறுத்தி வந்தான். 

அவன் பிரம்மாவை வேண்டி தவம் இருந்து தன் தாயை தவிர வேறு யார் மூலமாகவும் தனக்கு மரணம் ஏற்படக்கூடாது என்ற வரம் பெற்றவன். இவன் கொடுமை தாங்காது மக்கள் கிருஷ்ணரிடம் தஞ்சம் அடைந்தனர்.
 
உடனே கிருஷ்ணர் நரகாசுரனை அழிக்க தானே களத்தில் இறங்கினார். அவனது வரம் பற்றி அறிந்த கிருஷ்ணர் தன்னுடன் பூமாதேவியின் மறு அவதாரமான சத்தியபாமாவை தன்னுடன் போருக்கு அழைத்து சென்றார். 
 
இப்போரில் கிருஷ்ணர் ஒரு கால கட்டத்தில் மயக்கமடைந்து விழுந்து விட, தன் கணவரையே தாக்கிய இவனை விடேன் என சத்தியபாமா வில்லை எடுத்து அம்பு மழை பொழிந்தாள். அம்புகளால் துளைக்கப்பட்ட நரகாசுரன் உயிர் பிரிந்து வீழ்கிறான்.
 
இதன் பின் கிருஷ்ணர் நரகாசுரன் பிடியில் இருந்த பெண்களை மீட்டார். இந்த வதம் நடைபெற்ற நாளின் அதிகாலையில் கிருஷ்ணர் எண்ணெய் தேய்த்து குளித்து தலை முழுகினார்.

மக்கள் ஆரவாரத்துடன் வீடுகளில் தீபங்களை அணிவரிசையாய் ஏற்றி மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். இதனால் நரகாசுரன் தான் இறந்த நாளை இதேபோல் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என வரம் கேட்டான். அதன்படியே நரகாசுரன் சதுர்த்தி என்றவாறு தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அய்யப்பன் வழிபாட்டில் பேட்டை துள்ளல்.. முக்கிய சடங்கின் முழு விவரங்கள்..!

இந்த ராசிக்காரர்களுக்கு நண்பர்களால் நன்மை ஏற்படும்!– இன்றைய ராசி பலன்கள்(19.11.2024)!

ஐயப்பன் கோவிலில் 18 படிகள் வைக்கப்பட்டது ஏன்? ஆன்மீக தகவல்..!

இந்த ராசிக்காரர்கள் தொழில் விருத்தியடையும்!– இன்றைய ராசி பலன்கள்(18.11.2024)!

இந்த ராசிக்காரர்கள் கடினமான வேலையையும் எளிதாக செய்து முடிப்பீர்கள்!– இன்றைய ராசி பலன்கள்(17.11.2024)!

அடுத்த கட்டுரையில்
Show comments