Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்க வேண்டும் என்று கூறப்படுவதற்கான காரணம் என்ன...?

Webdunia
வியாழன், 16 ஜூன் 2022 (17:12 IST)
அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்க வேண்டும் என்று நம் சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன.


பின்பு குறிப்பிட்ட நேரத்தில் ஓய்வு எடுக்க வேண்டும். உறங்க வேண்டிய நேரத்தில் விழித்திருந்தால், நோய்கள் எல்லாம் நம்மை நோக்கி வரும். அதனால்தான் நமது பெரியோர்கள் அதிகாலையில் எழ வேண்டும் என்றார்கள். அந்த நேரத்தில் இறைவனிடம் வைக்கின்ற அனைத்துவித பிரார்த்தனைகள் கண்கூடாகவே நிறைவேறுகிறது.

சூரியன் உதிப்பதற்கு 48 நிமிடங்களுக்கு முன் பிரம்ம முகூர்த்தம் ஆரம்பமாகின்றது. பிரம்ம முகூர்த்தம் என்பது, பிரம்மா எனப்படும் நான்முகனை குறிக்கின்றது. படைக்கும் தொழில் புரியும் நான்முகன் தன்னுடைய நாவில் சரஸ்வதி அமரச் செய்து 24 கலைகளையும் படைத்தார்.

பிரம்ம முகூர்த்தத்தில் திருமணம் மற்றும் வீடு கிரகபிரவேசம் செய்வது சிறப்பாகக் கருதப்படுகிறது.

இரவில் உறங்கும் உயிர்கள் மீண்டும் இணைந்து மறுபிறவிதானே எனவே ஒவ்வொரு நாளும் காலையில் மறுபிறவி பெறுவதை சிருஷ்டி படைத்தல் என்று சொல்லலாம். இத்தொழிலைச் செய்பவர் பிரம்மா. எனவே, இவரது பெயரால் விடியற்காலைப் பொழுதை பிரம்ம முகூர்த்தம் என்று வைத்துள்ளார்கள். பிரம்ம முகூர்த்தத்தில் திதி வார நட்சத்திர யோக தோஷங்கள் கிடையாது.

இந்த நேரம் எப்போதுமே சுபவேளைதான் இந்நேரத்தில் எழுந்து குளித்து இறை வழிபாட்டைச் செய்து நமது வேலையை செய்ய துவங்கினால் அன்று முழுவதும் வெற்றிதான்.

பிரம்ம முகூர்த்தத்தில் வீட்டில் விளக்கேற்றி வழிபடுவதன் மூலம், சகல சௌபாக்கியங்களும் பெறலாம் என்பது ஐதீகம். தெய்வீகத்தன்மை இருக்கக்கூடிய நேரம் பிரம்ம முகூர்த்தம். ஒவ்வொரு நாள் காலையிலும் 4 மணி முதல் 6 மணிக்குள் பிரம்ம முகூர்த்தமாக எடுத்துக் கொள்ளலாம்.

வாழ்வில் மாற்றத்தை சரி செய்ய லட்சுமி கடாக்ஷத்துடன், நினைத்த காரியங்களை நிறைவேற்ற, இந்த பிரம்ம முகூர்த்தத்தைப் பயன்படுத்தலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணியர்-தெய்வானை திருக்கல்யாணம்.. குவிந்த பக்தர்கள்..!

இந்த ராசிக்காரர்களுக்கு தடைப்பட்ட சுபகாரியங்கள் கைக்கூடும்! - இன்றைய ராசி பலன்கள் (18.03.2025)!

ஒப்பிலியப்பன் கோவிலில் இன்று பங்குனி பெருவிழா கொடியேற்றம்: தேரோட்ட தேதியும் அறிவிப்பு..!

14,000 பேர் பங்கேற்ற சத்குருவின் தியான நிகழ்ச்சி! - டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 64 நாடுகளில் இருந்து மக்கள் பங்கேற்பு!

இந்த ராசிக்காரர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும்! - இன்றைய ராசி பலன்கள் (17.03.2025)!

அடுத்த கட்டுரையில்
Show comments