Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சித்தர்கள் கூற்றுப்படி நோயின்றி வாழ என்ன செய்ய வேண்டும்...?

Webdunia
உடலுக்கு ஒத்துவராத அல்லது ருசியின் காரணமாய் தேவைக்கு அதிகமாய் உணவருந்தினால் மட்டுமே உடலுக்கு நோய்  வருகிறது. வாதம், பித்தம், சிலேத்துமம் என்று மருத்துவர்கள் வரையறுத்துள்ள இம்மூன்றில் ஒன்று அளவுக்கு அதிகமானாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும்.

 
பசுவின் பாலையே அருந்த வேண்டுமாம். எண்ணெய்த் தன்மையுடைய உணவுகளை உட்கொள்ளும் நாட்களில் வெந்நீரில் குளிப்பதும், குடிப்பதும் உடலுக்கு நன்மை கொடுக்குமாம்.
 
ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று  குறிப்பிடுகிறார் திருமூலர். கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு.
 
கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து விட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதில் தினசரி  ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம். 
 
* நாளொன்றுக்கு 2 முறை உணவு கொள்ள வேண்டும். பசித்தப்பின் உணவருந்த வேண்டும்.
* இரவில் மட்டும் உறக்கம் கொள்ள வேண்டும்.
* மாதம் ஒரு முறை புணர்ச்சி கொள்ளவும். பகலில் பணர்ச்சி கூடாது.
* புளித்த தயிரையே உண்ண வேண்டும்.
* பசும் பாலையே உண்ண வேண்டும்.
* எண்ணெயிட்டு தலை முழுகும்போது வெந்நீரில் குளிக்கவேண்டும்.
* வாசனைப் பொருட்களையும் பூக்களையும் இரவில் முகருதல் கூடாது.
* இரவில் விளக்கு, மரம், மனிதர் இவைகளின் நிழல்களில் தங்கக் கூடாது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2025ம் ஆண்டில் இந்த 3 ராசிக்காரர்கள்தான் பணக்காரர்கள்! தீர்க்கதரிசி பாபா வெங்கா கணிப்பு!

2025 சனி பெயர்ச்சி! ஏழரை சனியின் பார்வையில் விழும் 3 ராசிகள் இதுதான்..! எந்த ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்? | 2025 Sani Peyarchi

2025 New Year Horoscope: 12 ராசிக்காரர்களுக்கும் உகந்த தெய்வங்கள் யார்? எப்போது வழிபட வேண்டும்?

ஐயப்ப விரதம் மேற்கொள்பவர்கள் அனுதினம் சொல்ல வேண்டிய மந்திரம்! Ayyappa Mandhiram

இந்த ராசிக்காரர்களுக்கு தானம், தர்மத்தால் நன்மை உண்டாகும்!– இன்றைய ராசி பலன்கள்(26.11.2024)!

அடுத்த கட்டுரையில்
Show comments