Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரட்டாசி மாதம் என்றாலே நம் நினைவுக்கு வருவது என்ன...?

Webdunia
திங்கள், 10 அக்டோபர் 2022 (10:13 IST)
புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விரதம் இருந்து வழிபட்டு அவரது திருக்கோயில்களுக்கு சென்று தரிசனம் பெறுவதால் சகல நலன்களும் கைகூடும். அந்த வகையில் புரட்டாசி சனிக்கிழமை விரத வழிபாடு மிகவும் பழமை வாய்ந்ததும், மகத்துவம் மிகுந்ததும் ஆகும்.


புரட்டாசி மாதத்தில் வரும் ஏதாவது ஒரு சனிக்கிழமையில் இந்த விரதத்தை கடைபிடிக்கலாம். சனிக்கிழமையில் அதிகாலையில் எழுந்து வீட்டை சுத்தம் செய்து, குளித்து, பூஜை சாமான்களை சுத்தம் செய்து மஞ்சள், குங்குமம் இட வேண்டும்.

பிறகு கலச சொம்பை வைத்து, வாழை இலையில் புளி சாதம், தயிர் சாதம், சர்க்கரை பொங்கல், வடை, சுண்டல், பாயாசம் இடம் பெறுவது நல்லது. சில குடும்பங்களில் சாதம், குழம்பு, கூட்டு, பொரியல், அப்பளம், வடை, பாயாசம் என்று படையல் இடுவதும் வழக்கம். நைவேத்தியம் படைத்து பெருமாளுக்கு 9 அல்லது 11 எண்ணிக்கையில் வடை மாலை சாற்ற வேண்டும். அதன்பின் சொம்பில் நாமம் போட்டு பச்சரிசி மற்றும் சில்லறை நாணயங்களை நிரப்பி கொள்ள வேண்டும்.

துளசி தீர்த்தம் வைக்கும் பஞ்ச பாத்திரத்தில் சிறிது பச்சை கற்பூரம் மற்றும் துளசியை சேர்க்க வேண்டும். மேலும் வெற்றிலை, பாக்கு, பூ, பழம், தேங்காயும் இடம் பெறுவது அவசியம்.

புரட்டாசி பூஜையில் மாவிளக்கு ஏற்றுவது விசேஷம். தேங்காய் உடைத்து, மாவிளக்கேற்றி, தூப தீபங்கள் காண்பித்து, சாம்பிராணி, கற்பூர ஆரத்தியை படையல் முழுவதுமாக சுற்றி எடுக்க வேண்டும். குறிப்பாக கோவிந்தா.. கோவிந்தா.. என்று நாமம் எழுப்பி பெருமாளை வழிபட வேண்டும். இந்த விரதத்தை முடிக்கும் வரை உணவு எதுவும் எடுத்துக் கொள்ளாமல் விரதம் இருப்பது நல்லது.

Edited by Sasikala

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாரியம்மன் வழிபாட்டில் பக்தர்கள் செலுத்தும் நேர்த்திக்கடன்கள்..!

இந்த ராசிக்காரர்களுக்கு பணவரவுகள் திருப்தி தரும்! - இன்றைய ராசி பலன்கள் (22.03.2025)!

1500 ஆண்டுகள் பழமையான சிவகிரி முருகன் கோவில்.. வேண்டும் வரம் கிடைக்கும்..!

இந்த ராசிக்காரர்கள் வருங்காலத்திற்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்! - இன்றைய ராசி பலன்கள் (21.03.2025)!

பக்தர்களுக்காக விரதம் இருக்கும் சமயபுரம் மாரியம்மன்.. ஆச்சரிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments