சதுர்த்தியன்று விரதம் இருக்கும் முறைகள் என்ன...?

Webdunia
வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (10:01 IST)
சங்கடஹர சதுர்த்தியன்று அதிகாலை நீராடி, பால் பழம் அருந்தி, உணவு உட்கொள்ளாமல் மாலை வரை கணநாதன் நினைவோடு உபவாசம் இருக்க வேண்டும்.

 
மாலை ஆலயத்திற்கு சென்று, விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனையில் கலந்துக்கொள்ள வேண்டும்.
 
அன்றைய தினம் ஆலயத்தை எட்டு முறை வலம் வருதல் வேண்டும். அனைத்து பூஜைகளும் முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து உபவாசத்தை முடித்துக்கொள்ள வேண்டும். விநாயகப் பெருமானுக்கு வெள்ளை எருக்கு மற்றும் அருகம்புல் மாலை சாற்றி வழிபடுவது சிறப்பு.
 
பலன்கள் : இவ்விரதத்தை கடைபிடிப்பதால் நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய் தீரும். வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகின்றவர்கள் நிலையான சந்தோஷத்தை அடைய முடியும்.
 
மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்திக்கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம், நன்மக்கட்பேறு என பலவிதமான நன்மைகளை அடைய முடியும்.
 
சனி தோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால், சனியின் தாக்கம் பெருமளவு குறையும்.
 
சங்கடங்களை நீக்கி அளவில்லாத நன்மைகளை தரும் சங்கடஹர சதுர்த்தி விரதமிருந்து விநாயகப் பெருமானின் அருளைப் பெறுவோம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்ரீவாஞ்சியம்: கார்த்திகை கடைசி ஞாயிறு தீர்த்தவாரி.. பாவம் நீக்கும் 'குப்த கங்கை'!

சபரிமலையில் திடீரென நெரிசல் குறைந்தது: 30 நிமிடங்களில் தரிசனம்.. என்ன காரணம்?

தீராத தோல் நோய் தொல்லையா? இந்த கோவிலுக்கு உடனே போங்க..!

இன்று கார்த்திகை தீபம்: விளக்கு ஏற்றுவதன் முறைகளும் பலன்களும்!

திருப்பதி வைகுண்ட ஏகாதசி: 24 லட்சம் விண்ணப்பங்கள்; இன்று குலுக்கல்!

அடுத்த கட்டுரையில்
Show comments