மகா விஷ்ணுவின் அவதாரங்களில் முக்கியமானவராக பார்க்கபடும் நரசிம்மர். மகா விஷ்ணுவின் தசாவதாரங்களில் 4-வது அவதாரம் தான் நரசிம்ம அவதாரம். வைகாசி மாதம் வளர்பிறை சதுர்த்தியன்று சூரியன் மறையும் நொடியில், (பகலுமின்றி, இரவுமின்றி) மாலை அந்திப்பொழுதில் நரசிம்மர் அவதரித்தார். சுவாதி நட்சத்திரத்தன்று அவரை வழிபடுவது நல்ல பலனை தரும். தசாவதாரங்களில் நரசிம்ம அவதாரமே திடீரென தோன்றிய அவதாரமாகும். நரசிம்மன் என்றால் ‘ஒளிப்பிழம்பு’ என்று பொருள்.நரசிம்ம அவதாரம் விஷ்ணு மனித...