Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்ரீரங்கத்தில் இன்று பந்தக்கால் நடும் நிகழ்வு.. சொர்க்கவாசல் திறப்பு எப்போது?

Sri Rangam
Mahendran
வியாழன், 14 நவம்பர் 2024 (18:25 IST)
ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி தினத்தில், சொர்க்கவாசல் திறக்கப்படும் நிகழ்வு மிக முக்கியமானது. இதற்கான பந்தக்கால் நடும் நிகழ்வு இன்று நடைபெற்றது. 
 
ஒவ்வொரு ஆண்டும், வைகுண்ட ஏகாதசி தினத்தில் பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்படும் நிகழ்ச்சி நடைபெறும். அடுத்த ஆண்டு, ஜனவரி 10ஆம் தேதி ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறக்கப்படும். ஜனவரி 9ஆம் தேதி மோகினி அலங்காரம் நடைபெறும், பத்தாம் தேதி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி இருக்கும். 16ஆம் தேதி திருக்கைத்தல சேவை, 17ஆம் தேதி திருமங்கை மன்னன் விருது நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
 
மேலும், 19ஆம் தேதி தீர்த்தவாரி, 20ஆம் தேதி நம்மாழ்வார் மோட்சம் ஆகிய நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன. இந்த நிகழ்வுகள் அனைத்தும் பெருமாளின் பக்தர்களுக்கு சிறப்பு தரும் வழிபாட்டு நிகழ்வுகளாகும்.
 
இந்த நிகழ்வுகளின் தொடக்கமாக இன்று பந்தக்கால் நடும் நிகழ்வில் கோவில் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். பந்தக்காலில் புனித நீர் ஊற்றி, சந்தனம், மாவிலை மாலை அணிவிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

14,000 பேர் பங்கேற்ற சத்குருவின் தியான நிகழ்ச்சி! - டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 64 நாடுகளில் இருந்து மக்கள் பங்கேற்பு!

இந்த ராசிக்காரர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும்! - இன்றைய ராசி பலன்கள் (17.03.2025)!

இந்த ராசிக்காரர்கள் எதையும் ஆலோசனை செய்து முடிவெடுப்பது நல்லது! - இன்றைய ராசி பலன்கள் (16.03.2025)!

பங்குனி மாத பூஜை.. சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு..!

திருப்பதி ஏழுமலையான் கோவிலின் 7 சிறப்புகள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments