Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவராத்திரி விரதத்தின் வகைகளும் அதன் அற்புத பலன்களும் !!

Webdunia
வியாழன், 25 ஆகஸ்ட் 2022 (09:14 IST)
சிவராத்திரி விரதம் ஐந்து வகைப்படும். நித்திய சிவராத்திரி, மாத சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, யோக சிவராத்திரி, மகா சிவராத்திரி.


1. சித்திரை மாதம்: இம்மாதம் தேய்பிறை அஷ்டமி சிவராத்திரி உமா தேவியால் வழிபடப்பட்டது.
2. வைகாசி மாதம்: வளர்பிறை. அஷ்டமி சிவராத்திரி சூரிய பகவனால் வழிபடப்பட்டது.
3. ஆனி மாதம்: வளர்பிறை சதுர்த்தசி சிவராத்திரி ஈசனால் வழிபடப்பட்டது.
4. ஆடி மாதம்: தேய்பிறை பஞ்சமி சிவராத்திரி முருகனால் வழிபடப்பட்டது.
5. ஆவணி மாதம்: வளர்பிறை-அஷ்டமி சிவராத்திரி சந்திரனால் வழிபடப்பட்டது.
6. புரட்டாசி மாதம்: வளர்பிறை திரியோதசி சிவராத்திரி ஆதி சேஷனால் வழிபடப்பட்டது.
7. ஐப்பசி மாதம்: வளர்பிறை-துவாதசி சிவராத்திரி இந்திரனால் வழிபடப்பட்டது.
8. கார்த்திகை மாதம்: 2 சிவராத்திரி வளர்பிறை சப்தமியும் தேய்பிறை அஷ்டமியும் சிவராத்திரிகள் இவற்றை சரஸ்வதி தேவியால் வழிபடப்பட்டது.
9. மார்கழி மாதம்: வளர்பிறை, தேய்பிறையில் வரும் சிவராத்திரி லட்சுமியால் வழிபடப்பட்டது.
10. தை மாதம்: வளர்பிறை-நந்தி தேவரால் வழிபடப்பட்டது.
11. மாசி மாதம்: தேய்பிறை-தேவர்களால் வழிபடப்பட்டது.
12. பங்குனி மாதம்: வளர்பிறை-குபேரனால் வழிபடப்பட்டது.

ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். சிவனடியார் பலர் இந்த சிவராத்திரியையும் மாதந்தோறும் தவறாமல் கடைப்பிடித்து வருகின்றனர். விரதம் கடைப்பிடிப்போர் முதல் ஒருநாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்யவேண்டும். அடுத்தநாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

வீட்டில் துளசி செடி வளர்த்தால் ஏற்படும் நன்மைகள்..!

சிவபெருமானுக்கு சாப விமோச்சனம் அளித்த ஸ்தலம்! தோஷங்களை போக்கும் அங்காளம்மன் கோவில்..!

இந்த ராசிக்காரர்கள் சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள்! - இன்றைய ராசி பலன் (23.05.2024)!

நாள்பட்ட திருமண தடைகளை நீக்கும் அற்புத திருக்கோவில்கள்!

இந்த ராசிக்காரர்களுக்கு நிதானம் அவசியம்! கடன்பாக்கி வந்து சேரும்! - இன்றைய ராசி பலன் (22.05.2024)!

அடுத்த கட்டுரையில்
Show comments