Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திருப்பாவை பாசுரம் பாடல் - 26

திருப்பாவை பாசுரம் பாடல் - 26

ஸ்ரீ.ஸ்ரீ.

, திங்கள், 11 ஜனவரி 2016 (05:00 IST)
திருப்பாவை பாசுரம் பாடல் - 26
 
மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்,
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே
சாலப் பெரும்பறையே, பல்லாண்டு இசைப்பாரே,
கோல விளக்கே, கொடியே விதானமே,
ஆலின் இலையாய்! அருளேலோர் எம்பாவாய்.


 
 
பொரு‌ள்:
 
நோன்பிற்குத் தேவையானவைகளை எல்லாம் கண்ணனிடம் வேண்டிக் கொள்ளும் பாடல்.
 
அடியவர்களிடம் மிகுந்த ஆர்வம் உள்ளவனே!
நீல மணி போல நீல நிற மேனியனே!
ஆலிலை மேல் பள்ளி கொண்டிருப்பவனே!
 
மார்கழி நோன்பைப் பெரியவர்கள் கொண்டாடினார்கள். அதை அனுசரித்து, இப்போது நாங்களும் மார்கழி நோன்பைச் செய்து கொண்டிருக்கிறோம்.

அந்த நோன்பிற்காக (எங்களுக்கு)த் தேவையானவைகளைக் கேட்டால்; உலகத்தில் உள்ள தீயவர்கள் எல்லாம் நடுங்கும்படியாக ஒலிக்கின்ற, பால் போன்ற நிறங்கொண்ட, உன்னுடைய ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் என்னும் சங்கைப் போன்ற சங்குகள் வேண்டும்.
 
அகன்று, மிகவும் பெரிதாக இருக்கும் பறைகள் வேண்டும்.உன் புகழ் பாடும் பாடகர்கள் வேண்டும். அழகிய மங்கல தீபங்கள் வேண்டும். (நாங்கள் எல்லாம் உன் அடியார்கள் என்பதை விளக்கும்) கொடிகள் வேண்டும்.

                                                                                                   விளக்கவுரை: ஸ்ரீ.ஸ்ரீ.

Share this Story:

Follow Webdunia tamil