Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திருநீறு அணிவது ஏன்?

திருநீறு அணிவது ஏன்?

திருநீறு அணிவது ஏன்?
நாம் வெளியில் செல்லும் போது, அங்கு இருக்கும் அதிர்வுகளை பலவழிகளில்நம் உடல் ஏற்றுக் கொள்கிறது. இது நம் உடலின் ஏழு சக்கரங்கள் வழியாகநிகழ்கிறது.


 


அதனால் தான், நல்ல அதிர்வுகளை நம் உடல் ஏற்றுக் கொள்ளும்விதமாக திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் நம் கலாசாரத்தில் இருந்துவருகிறது. 
 
பசுவின் சாணம் மற்றும் சில பிரத்யேகப் பொருட்கள் கலந்தகலவையின் சாம்பல் தான் விபூதி அல்லது திருநீறு. இதற்கு அதிர்வுகளை உள்வாங்கும் திறன் உண்டு.
 
விபூதி இட்டுக் கொள்ளும் போது, வாழ்வின் உயர்ந்த அம்சங்களை ஈர்த்துக் கொள்ளலாம். நம்மைச் சுற்றிலும் தெய்வீகத் தன்மை உண்டாகும். இதனால், தீயவற்றைத் தவிர்க்க முடியும்.
 
விபூதி இட்டுக் கொள்ளும் இடங்களும், பலன்களும்
 
1. புருவ மத்தியில் (ஆக்ஞா சக்கரம்) வாழ்வின் ஞானத்தை ஈர்த்துக் கொள்ளலாம்.
 
2. தொண்டைக்குழி(விசுத்தி சக்கரம்) நமது சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.
 
3. நெஞ்சுக்கூட்டின் மையப்பகுதி தெய்வீக அன்பைப் பெறலாம். மேலும், விபூதியை எடுக்கும் போது, மோதிரவிரலால் எடுப்பது மிகவும் சிறந்தது. ஏனென்றால், நம் உடலிலேயே மிகவும் பவித்ரமான பாகம் என்று அதைச்சொல்லலாம். நம் வாழ்வையே கட்டுப்படுத்தும் சூட்சுமம் அங்கு உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil