தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றம் எப்போது?

Webdunia
திங்கள், 13 மார்ச் 2023 (18:48 IST)
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா மார்ச் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப் போவதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். 
 
இளையான்குடி அருகே உள்ள தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு மார்ச் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் என்றும் அதன் பின்னர் பத்து நாட்கள் விசேஷமாக நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றும் கோவில் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். 
 
ஏப்ரல் ஐந்தாம் தேதி பொங்கல் வைபவம் நிகழ்ச்சி நடைபெறும் என்றும் விழாவுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் அதிக அளவு வருவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பழனி முருகன் கோயிலில் நவராத்திரி விழா ஆரம்பம்.. பக்தர்கள் முன்னிலையில் காப்பு கட்டும் நிகழ்வு..!

நவராத்திரியில் சொல்ல வேண்டிய 108 துர்கா தேவி போற்றி..!

நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் எந்தெந்த நிற புடவை அணிய வேண்டும்?

இந்த ராசிக்காரர்களுக்கு கூடுதல் செலவுகள் ஏற்படலாம்! - இன்றைய ராசி பலன்கள் (22.09.2025)!

இந்த ராசிக்காரர்களுக்கு வரவும் செலவும் நிகராக இருக்கும்! - இன்றைய ராசி பலன்கள் (21.09.2025)!

அடுத்த கட்டுரையில்
Show comments