Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாதந்தோறும் வரும் திருவோண நாளின் சிறப்புக்களும் பலன்களும் !!

Webdunia
புதன், 7 செப்டம்பர் 2022 (11:13 IST)
திருவோண விரதம் மேற்கொள்பவர்களின் வாழ்வில் கஷ்டங்கள் நீங்கி செல்வ செழிப்பு ஏற்படும். மனக்குறைகள் அகன்று சந்தோஷமான வாழ்க்கை அமையும்.


குழந்தை இல்லாதவர்கள் இந்த விரதத்தை மேற்கொண்டால் வாமனன் போன்ற அழகான, அறிவான குழந்தை கிடைக்கும் மற்றும் செல்வம் நிலைத்து நிற்கும் என்பது நம்பிக்கையாகும்.

மாதந்தோறும் திருவோண நாளில் விரதம் இருந்தால், சீர் குலைந்த மனம் சீராகும். உறவினர்களுக்கிடையே ஏற்பட்ட பகை அகலும். துன்பங்கள் அனைத்தும் நீங்கி நன்மைகள் உண்டாகும்.

திருவோண விரதம் இருக்கும் பக்தர்கள் பெருமாளை வணங்கி துதிப்பாடல்கள் பாட வேண்டும். விரதம் இருக்க முடியாதவர்கள் அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும். மேலும், வீட்டில் நெய் விளக்கேற்றி வழிபடுவது சிறப்பான பலன்களை தரும்.

திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்களும், சந்திர திசை நடப்பவர்களும் பெருமாளை தரிசித்து வணங்குவது சிறப்பாகும். இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த திருவோண நட்சத்திரத்தன்று சுண்டலை பிரசாதமாக பெருமாளுக்கு படைத்தால் துன்பங்கள் அனைத்தும் நீங்கி இன்பங்கள் பெருகும்.

திருவோணம் நட்சத்திரமான நாளைய தினம் பெருமாளை காலையில் வழிபாடு செய்தால் நோய்கள் குணமாகும். நண்பகல் வழிபாடு செய்தால் செல்வம் பெருகும். மாலை வழிபாடு செய்தால் பாவம் நீங்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்களுக்கு வெளிநாடு செல்ல வாய்ப்புகள் வரும்! - இன்றைய ராசி பலன்கள் (19.03.2025)!

திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணியர்-தெய்வானை திருக்கல்யாணம்.. குவிந்த பக்தர்கள்..!

இந்த ராசிக்காரர்களுக்கு தடைப்பட்ட சுபகாரியங்கள் கைக்கூடும்! - இன்றைய ராசி பலன்கள் (18.03.2025)!

ஒப்பிலியப்பன் கோவிலில் இன்று பங்குனி பெருவிழா கொடியேற்றம்: தேரோட்ட தேதியும் அறிவிப்பு..!

14,000 பேர் பங்கேற்ற சத்குருவின் தியான நிகழ்ச்சி! - டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 64 நாடுகளில் இருந்து மக்கள் பங்கேற்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments