Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நவராத்திரி வழிபாட்டில் கொலு வைப்பதின் சிறப்புக்கள் !!

Webdunia
திங்கள், 3 அக்டோபர் 2022 (19:01 IST)
வீட்டில் கொலு வைத்தால், அம்பிகை அனைத்து அம்சமாக நம் வீட்டில் எழுந்தருளி விட்டாள் என்பது நம்பிக்கையாகும். ஒரு நவராத்திரிக்கு கொலு வைத்தால் பிறகு வாழ்நாள் முழுவதும் நவராத்திரி நாட்களில் கொலு வைக்க வேண்டும் என்கிறார்கள்.


நவராத்திரி பூஜையை அஸ்தம், சித்திரை அல்லது மூலம் நட்சத்திர நாட்களில் தொடங்குவது நல்லது. இந்த நாட்களில் வைதிருதி யோக நேரம் இருந்தால் மிகவும் நல்லது.

புரட்டாசி மாதத்தை எமனின் கோரை பல் என்று அக்னி புராணம் சொல்கிறது. இந்த மாதம் எமனின் பாதிப்பில் இருந்து தப்பவே நவராத்திரி விழாவாக கொண்டாடப்படுகிறது.

நவராத்திரி பூஜைகள் அனைத்தையும் செய்து, சுகன்யா தேவி என்பவள் எல்லா வித பலன்களையும் பெற்றாள்.

விஜய தசமி தினத்தன்று ஸ்ரீஆயுர் தேவியை போற்றி வழிபட வேண்டும். இதுதான் நவராத்திரி பூஜையின் நிறைவான பூஜையாகும்.

நவராத்திரி நாட்களில் பகலில் சிவ பூஜையும் இரவில் அம்பிகை பூஜையும் செய்வதே சரியான வழிபாடாகும்.

நவராத்திரி 9 நாட்களும் தினமும் பகலில் 1008 சிவ நாமாவளிகளை ஜெபித்து வழிபாட்டால் அளவிடற்கரிய பலன்கள் கிடைக்கும்.

நவராத்திரி வழிபாட்டை தினமும் தொடங்கும் போது ஸ்யவன மகரிஷியையும் சுகன்யா தேவியையும் தியானித்தபடியே தினசரி பூஜையை தொடங்க வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண்களுக்கு திருமண வரம் கிடைக்க உதவும் கூடாரவல்லி நாள்..!

இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத திருப்பங்களால் வாழ்க்கை தரம் உயரும்!– இன்றைய ராசி பலன்கள்(22.11.2024)!

ஐயப்ப பக்தர்கள் கருப்பு உடை அணிவது ஏன்?

இந்த ராசிக்காரர்களுக்கு வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறும்!– இன்றைய ராசி பலன்கள்(21.11.2024)!

அடுத்த கட்டுரையில்
Show comments