Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை செவ்வாய் பிரதோஷம்.. வழிபாட்டின் சிறப்புக்கள் என்னென்ன?

Mahendran
திங்கள், 10 மார்ச் 2025 (19:02 IST)
ஒவ்வொரு மாதத்திலும் வளர்பிறை மற்றும் தேய்பிறை காலங்களில் திரயோதசி திதியில் வரும் நாள் பிரதோஷ தினமாகும். குறிப்பாக செவ்வாய் கிழமைகளில் வரும் பிரதோஷம் மிகுந்த சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த நாளில் விரதமிருந்து, சிவபெருமானை வழிபடுவது உடல் நோய்களை நீக்கி, சகல நன்மைகளையும் அளிக்கும்.
 
புராணக் கதைகளின்படி, உலகத்தை காப்பதற்காக சிவன் ஆலகால விஷத்தை அருந்திய காலமே பிரதோஷ காலமாகும். பிரதோஷ நேரமான மாலை 4.30 முதல் 6.00 மணி வரை சிவன், நந்தி தேவர் ஆகியோரை தரிசிப்பது சிறப்பாகும். மக்கள் இந்நாளில் சிவனிடம் வேண்டுதல்களைச் செய்து, நந்தியின் காதில் தங்கள் பிரார்த்தனைகளை சொல்லும் பழக்கம் உள்ளனர்.
 
சிவன் அபிஷேகத்தில் பசும்பால், இளநீர், வில்வ இலை, தும்பைப் பூ போன்றவை பயன்படுத்தினால் அதிக நன்மை கிடைக்கும். பிரதோஷ நாளில் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தால் செல்வம் பெருகும். மேலும், ருண விமோசன பிரதோஷ நாளில் சிவனை வழிபட்டால், கடன் தொல்லைகள் நீங்கி, வாழ்க்கையில் முன்னேற்றம் பெறலாம் என்று நம்பப்படுகிறது.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திராஷ்டம நாளில் சந்திரேஸ்வரரை வழிபட்டால் சங்கடங்கள் தீரும்..!

பவானி நகரில் செல்லியாண்டி அம்மன் கோவில் விழா – பக்தர்களின் பெரும் திரள்!

இந்த ராசிக்காரர்களுக்கு கடன் பாக்கிகள் வசூலாகும், செல்வம் பெருகும்! - இன்றைய ராசி பலன்கள் (05.03.2025)!

கும்பகோணம் மகாமகக் குளம் காசி விஸ்வநாதர் கோவிலில் மாசி மகம் விழா..!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி பெரும் திருவிழா.. 12 நாட்கள் நடைபெறும்..!

அடுத்த கட்டுரையில்
Show comments