Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சங்கடஹர சதுர்த்தி: விநாயகர் வழிபாட்டு முறைகளும் பலன்களும் !!

Webdunia
வியாழன், 13 அக்டோபர் 2022 (09:33 IST)
சங்கடஹர சதுர்த்தி மற்றும் கிருத்திகை இவ்விரண்டும் சேர்ந்து வருவது மிகவும் சிறப்பு. இத்தகைய நாளில் விரதம் மேற்கொள்வது விசேஷம் ஆகும். தேய்பிறையில் வரும் சங்கடஹர சதுர்த்தியில் விநாயகருக்கும், முருகப்பெருமானை வளர்த்த கார்த்திகை பெண்களை நினைவூட்டும் வகையில் கிருத்திகை நட்சத்திரம் முருகனுக்கும் உகந்த நாளாக கருதி விரதமிருக்கலாம்.


'சங்கஷ்டம்" என்றால் கஷ்டங்கள் சேருதல் என்று பொருள். வாழ்வில் சேரும் சகல சங்கடங் களை நீக்க சதுர்த்தி விரதம் கடை பிடிக்கப்படுகிறது. பௌர்ணமி யை அடுத்த நான்காம் நாள் சங்கடஹர சதுர்த்தி தினமாகும். அன்றைக்கு மாலையும், இரவும் சேரும் நேரத்தில் விநாயகருக்கு வழிபாடு செய்யப்படுகிறது. எந்தவொரு தெய்வத்தை வணங்குவதாக இருந்தாலும் முதலில் நாம் வழிபடும் தெய்வம் விநாயகப்பெருமான் தான்.

விநாயகரை போலவே விரதங்களுக்குள் முதன்மையானதும், எளிமையானதும் சதுர்த்தி விரதம் தான். சதுர்த்தி அன்று காலையில் குளித்துவிட்டு, வீட்டிற்கு அருகிலுள்ள ஆலயத்துக்கு செல்ல வேண்டும். விநாயகரை 11 முறை வலம் வர வேண்டும். அறுகம்புல் கொடுத்து, அர்ச்சனை செய்து விநாயகரை வணங்க வேண்டும்.

கோயிலுக்கு செல்ல இயலாத நிலையில் வீட்டிலேயே மோதகம், பால், தேன், கொய்யா, வாழை, நாவல், கொழுக்கட்டை மற்றும் சுண்டல் போன்றவற்றை விநாயகருக்கு நெய்வேத்தியம் செய்து வழிபடலாம்.

விநாயகருக்கு பிடித்த இலை வன்னி இலை. வன்னி இலை களால் விநாயகரை பூஜிப்பது சிறப்பான பலன்களை தரும். அதிலும் வன்னி மரத்தடியே அமர்ந்திருக்கும் கணபதி ஆனந்தமயமானவர். நினைத்த காரியம் தடையில்லாமல் நடக்க விரும்புபவர்கள், இந்த வன்னி விநாயகரை வலம் வந்து வேண்டினால் வேண்டியது கிடைக்கும் என்பது ஐதீகம்.

Edited by Sasikala

தொடர்புடைய செய்திகள்

இந்துக்களின் புனித யாத்திரை திருவண்ணாமலை கிரிவலம் குறித்த அரிய தகவல்கள்..!

இந்த ராசிக்காரர்களுக்கு கல்வி சார்ந்த செயல்களில் நன்மை உண்டாகும்! - இன்றைய ராசி பலன் (15.05.2024)!

வீட்டில் விளக்கேற்றும்போது கவனிக்க வேண்டியது என்னென்ன?

வைகாசி மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மீனம்!

வைகாசி மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – கும்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments