இன்று ஒருநாள் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு.. என்ன விசேஷம்?

Mahendran
வியாழன், 5 ஜூன் 2025 (18:30 IST)
சபரிமலை ஐயப்பன் கோவில், வருடத்தின் பெரும்பாலான நாட்களில் மண்டல காலம் மற்றும் மகர விழா போன்ற முக்கிய கட்டங்களில் மட்டுமல்லாமல், மாதாந்திர பூஜைகள் மற்றும் சில விசேஷ நாள்களிலும் பக்தர்களுக்கு திறக்கப்படுகிறது.
 
இந்த ஆண்டுக்கான பிரதிஷ்டை தினம் இன்றைய நாளில் வந்துள்ளது. இதையொட்டி, கோவிலின் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி வழிபாட்டு நடை திறப்பை மேற்கொண்டார்.
 
இன்று அதிகாலை, பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் தொடங்கியுள்ளன. பக்தர்கள் ஆராதனையில் ஈடுபடுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இன்றைய பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நிறைவடைந்தவுடன், இரவு 10.30 மணிக்கு கோவில் நடை மூடப்படும்.
 
அதேபோல், ஆனி மாத மாதாந்திர பூஜைகளை முன்னிட்டு ஜூன் 14ஆம் தேதி மீண்டும் கோவில் நடை திறக்கப்படும். தொடர்ந்து, ஜூன் 15 முதல் 19 வரை ஐந்து நாட்கள் பூரண பூஜைகள் நடைபெறவுள்ளன.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீராத தோல் நோய் தொல்லையா? இந்த கோவிலுக்கு உடனே போங்க..!

இன்று கார்த்திகை தீபம்: விளக்கு ஏற்றுவதன் முறைகளும் பலன்களும்!

திருப்பதி வைகுண்ட ஏகாதசி: 24 லட்சம் விண்ணப்பங்கள்; இன்று குலுக்கல்!

திருவண்ணாமலை கிரிவலம்: இந்த மாத பௌர்ணமிக்கான உகந்த நேரம் அறிவிப்பு!

ஞானம், கல்வி அருளும் கும்பேஸ்வரர்: கும்பகோணம் ஆலயச் சிறப்புகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments