Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பில்லி, சூனியம், ஏவல் பாதிப்பா? உடனே இந்த கோவிலுக்கு செல்லுங்கள்..!

Mahendran
செவ்வாய், 13 ஆகஸ்ட் 2024 (18:22 IST)
பில்லி, சூனியம் ஏவல் போன்ற பிரச்சனைகளில் மாட்டிக் கொண்டிருப்பவர்கள் உடனடியாக புதுவையில் அமைந்துள்ள பிரத்தியங்கரா தேவி என்ற கோவிலுக்கு சென்றால் பிரச்சனை தீரும் என்று கூறப்பட்டு வருகிறது.

புதுவை நகரில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மொரட்டாண்டி காட்டு பகுதியில் பிரத்தியங்கரா தேவி கோவில் உள்ளது. இங்கு 72 அடி உயரமுள்ள பிரத்யேந்திரா தேவி சிலை உள்ளதாகவும் இதன் அருகில் பாதாள அறையில் ஒரு கோவில் அமைந்துள்ளதாகவும் கோவிலின் நுழைவாயிலில் சிங்கத்தின் வாய் போல் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

அதன் வழியாக படியில் இறங்கி பாதாள அறைக்கு சென்று தான் பிரத்தியங்கரா தேவியை தரிசனம் செய்ய வேண்டும் என்றும் தேவியின் கருவறை விமானம் பூர்ண மேடு போல் அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த கோவிலை வலம் வந்தால் பில்லி சூனியம் ஏவல் போன்ற பிரச்சனைகளில் இருந்து வெளியே வந்துவிடலாம் என்றும் எந்த விதமான புதிய பிரச்சனைகளும் ஏற்படாது என்று கூறப்படுகிறது.

இந்த கோயிலுக்கு தினமும் தமிழ்நாடு, புதுவை மட்டும் இன்றி கர்நாடகா, ஆந்திரா, கேரளா தெலுங்கானா போன்ற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்களுக்கு பணவரவு திருப்தி தருவதாக இருக்கும்! - இன்றைய ராசி பலன்கள் (19.01.2025)!

திருமணம் கைகூடவில்லையா? நாளை தேய்பிறை சஷ்டியில் இதையெல்லாம் செய்தால் போதும்,..!

இந்த ராசிக்காரர்களுக்கு வரவுக்கேற்ற செலவுகளும் அதிகரிக்கும்! - இன்றைய ராசி பலன்கள் (18.01.2025)!

சாமித்தோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதிவில் தைத்திருவிழா.. கொடியேற்றத்துடன் தொடக்கம்..!

இந்த ராசிக்காரர்களுக்கு பயணங்கள் அதிகரிக்கும்! - இன்றைய ராசி பலன்கள் (17.01.2025)!

அடுத்த கட்டுரையில்
Show comments