Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கணபதியின் பல்வேறு திருநாமங்கள் பற்றி தெரிந்துக்கொள்வோம் !!

Webdunia
வியாழன், 13 அக்டோபர் 2022 (10:32 IST)
விநாயகருக்கு நாள்தோறும் முறைப்படி பூஜைகள் செய்து வந்தால் நற்பலன்கள் கிட்டும். விநாயகரை வழிபடும் போது மோதகம், அவல்பொரி, அப்பம், அதிரசம், விளாம்பழம் போன்றவற்றை நிவேதனமாக வைத்து அருகம்புல்லைக் கொண்டு அர்ச்சனை செய்து இச்சுலோகங்களைப் பாராயணம் செய்தால் விசேஷ பலன்கள் கிடைக்கும்.


ஸூமுகன் - மங்களமான முகமுள்ளவன், ஏகதந்தன் - ஒற்றைத் தந்தம் உடையவன்.

கபில வர்ணன் - பழுப்பு நிறம் உடையவன், கஜகர்ணன் - யானைக்காது உடையவன்.

லம்போதரன் - பெரிய வயிறு உடையவன், விகடன் - மகிழ்ச்சி அருள்பவன்.

விக்னராஜன் - தடைகளுக்கு அரசன், விநாயகன் - தன்னிகரில்லாத் தலைவன்.

தூமகேது - தீப்போல் சுடர்பவன், கணாத்யக்ஷன் - பூதகணங்களின் முதல்வன்.

மேலும் படிக்க:சந்திரனின் பலம் பெற சதுர்த்தி விரதத்தை கடைப்பிடிப்பது ஏன்...?

பாலசந்திரன் - நெற்றியில் இளம்பிறை சூடியவன், கஜானன் - யானைமுகத்தோன்.

வக்ரதுண்டன் - வளைந்த துதிக்கை உடையவன், சூர்ப்பகர்ணன் - முறம் போல் காதுகள் உடையவன்.

ஹேரம்பன் - அடியார்களுக்கு அருள்பவன், ஸ்கந்தபூர்வஜன் - கந்தவேளின் அண்ணன்.

Edited by Sasikala

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்களுக்கு செலவுகள் சற்று அதிகரிக்கலாம்! இன்றைய ராசி பலன்கள் (26.07.2025)!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர்: உலகிற்கே முதல் பிள்ளையார்: தொன்மை சிறப்புகள்!

அம்பிகையே.. ஈஸ்வரியே..! ஆடி மாதத்தில் கூற 108 அம்மன் போற்றி மந்திரங்கள்!

அம்மனுக்கு வளைகாப்பு! அருளை அள்ளித் தரும் ஆடிப்பூரம் வழிபாடு! வளையல் சார்த்தினால் நன்மை!

இந்த ராசிக்காரர்களுக்கு பழைய பாக்கிகள் தாமதமாகும்! இன்றைய ராசி பலன்கள் (24.07.2025)!

அடுத்த கட்டுரையில்
Show comments