Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கணபதியின் பலவகையான உருவங்கள் பற்றி தெரிந்துக்கொள்வோம் !!

Webdunia
புதன், 14 செப்டம்பர் 2022 (18:24 IST)
திரயாக்ஷர கணபதி: பொன்னிற மேனியில் இருக்கும்திரயாக்‌ஷர கணபதி, பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் ஆகியவற்றை தனது நான்கு கரங்களிலும், மோதகத்தை தும்பிக்கையிலும் தாங்கியிருக்கிறார்.


க்ஷிப்ரபிரசாத கணபதி:
பெரிய வயிற்றினை கொண்ட க்ஷிப்ரபிரசாத கணபதி, ஆபரணங்களை சூடி, ஆறு திருக்கரங்களில், பாசம், அங்குசம், தாமரை, தர்ப்பை ஆகியவற்றை ஏந்தியதோடு, ஒரு கரத்தில் ஹஸ்த முத்திரையையும், துதிக்கையில் மாதுளம் பழத்தையும் கொண்டவர்.

ஹரித்ரா கணபதி:
மஞ்சள் நிறத்தில் இருக்கும் ஹரித்ரா கணபதி, பாசம், அங்குசம், தந்தம், மோதகம் ஆகியவற்றை, 4 திருக்கரங்களில் ஏந்தி இருப்பார்.

ஏகதந்தி கணபதி:
நீல நிற மேனியான ஏகாந்த கணபதி பெரிய வயிறு கொண்டிருப்பார். கோடரி, அட்சமாலை, தந்தம், லட்டு ஆகியவற்றை, நான்கு திருக்கரங்களில் ஏந்தி காணப்படுகிறார்.

சிருஷ்டி கணபதி:
சிவந்த மேனியுடன் இருக்கும் சிருஷ்டி கண்பதி தன் 4 கரங்களில் பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் இவற்றைத் ஏந்தியவர். பெருச்சாளி வாகனத்தில் அமர்ந்து காட்சி கொடுக்கிறார்.

உத்தண்ட கணபதி:
தனது பத்து திருக்கரங்களில்பாசம், நீல புஷ்பம், தாமரை, தந்தம், கரும்பு வில், கதை, ரத்ன கலசம், நெற்கதிர், மாதுளம் பழம், மாலை ஆகியவைகளை வைத்திருப்பார். இடது தொடையில், பச்சை நிற மேனி தேவியை ஏற்றிருப்பவர்.

ரணமோசன கணபதி:
வெண்பளிங்கு மேனியுடன் இருக்கும் ரணமோசன கணபதி, செந்நிறப் பட்டாடை உடுத்தி இருப்பார். தன் கரங்களில், பாசம், அங்குசம், தந்தம், நாவற்பழம் இவற்றைத் தாங்கி காணப்படுகிறார்.

தொடர்புடைய செய்திகள்

மீனாட்சி அம்மன் கோவிலின் தெப்பக்குளத்தின் சிறப்புகள்

இந்த ராசிக்காரர்களுக்கு பணவரத்து நன்மை தரும்! - இன்றைய ராசி பலன் (04.05.2024)!

மீனாட்சி அம்மன் கோவிலில் வன்னிமரத்தடி விநாயகர் கோவில்

இந்த ராசிக்காரர்களுக்கு கணவன், மனைவி இடையே கருத்து வேற்றுமை நீங்கும்! - இன்றைய ராசி பலன் (03.05.2024)!

வன்னி மரத்தை வணங்குவதால் ஏற்படும் பலன்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments