Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரூர் மாரியம்மன் ஆலயத்தில் நூதன அலங்காரம் - வீடியோ

Webdunia
கரூர் அருகே மகா மாரியம்மன் ஆலயத்தில் கஜா புயலில் புயல் பாதித்த மாவட்டங்களில் மீண்டும் விவசாயம் செழிக்க வேண்டியும், வெற்றிலை விவசாயிகளை காக்க வேண்டி மாரியம்மன் ஆலயத்தில் நூதன அலங்காரம் செய்யப்பட்டது.
கரூர் அருகே மகா மாரியம்மன் ஆலயத்தில் கஜா புயலில் புயல் பாதித்த மாவட்டங்களில் மீண்டும் விவசாயம் செழிக்க வேண்டியும்,  வெற்றிலை விவசாயிகளை காக்க வேண்டி மாரியம்மன் ஆலயத்தில், 1 லட்சத்து 8 வெற்றிலைகளை கொண்டு அலங்கார நிகழ்ச்சி
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுக்காவிற்குட்பட்ட, இலாலாபேட்டை பகுதியினை அடுத்த கீழ சிந்தலவாடி என்கின்ற கிராமத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயம், இந்த ஆலயத்தில், தமிழகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீண்டும்  விவசாயம் செழிக்க வேண்டியும், வெற்றிலை விவசாயிகளை காக்க வேண்டியும், உலக நன்மை வேண்டியும் அம்மன் ஆலயத்தில் மூலவர்  முதல் உற்சவர் சுவாமி வரையும் கருவறை மற்றும் உள்பிரகாரத்தில் சுமார் 1 லட்சத்து 8 வெற்றிலைகளை, அப்பகுதியினை சார்ந்த  வெற்றிலை விவசாயிகள் அலங்காரம் செய்துள்ளனர்.
 
முற்றிலும் வெற்றிலையால் அலங்கரிக்கப்பட்ட இந்த கோயிலின் அலங்காரம் காண்பவரை மிகவும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது. மூலவர் மாரியம்மனுக்கும்., வலதுபுறம் அமைந்துள்ள சுவாமி ஐயப்பனுக்கும், இடதுபுறம் அமைந்துள்ள உற்சவர் அம்மனுக்கும் விஷேச  அலங்காரங்களும் செய்யப்பட்டுள்ளது. இந்த அலங்காரம் இன்று முதல் மூன்று நாட்கள் வரை இருக்கும் என்றும் வெற்றிலை விவசாயிகள்  மற்றும் கோயில் நிர்வாகத்தினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்களுக்கு படிப்பில் மிகுந்த கவனம் தேவை! - இன்றைய ராசி பலன்கள் (29.03.2025)!

நாளை சூரிய கிரகணம்.. பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி உண்டா?

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – தனுசு!

இந்த ராசிக்காரர்களுக்கு உறவினர்களுடன் வாக்குவாதம் ஏற்படலாம்! - இன்றைய ராசி பலன்கள் (28.03.2025)!

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா.. குவிந்த பக்தர்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments