Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எந்தெந்த எண்ணெய்களில் விளக்கு ஏற்றக்கூடாது...? அறிந்துகொள்வோம்

Webdunia
செவ்வாய், 20 ஜூலை 2021 (00:20 IST)
கணபதிக்கு தேங்காய் எண்ணெய் உகந்ததாகும். முருகனுக்கு நெய் தீபம் உபயோகப்படுத்துவது நல்லது. நாராயணனுக்கு நல்லெண்ணெய் ஏற்றதாகும். மகாலட்சுமிக்கு நெய் உபயோகப்படுத்தலாம். சர்வ தேவதைகளுக்கு நல்லெண்ணெய் உகந்தது.
 
குலதெய்வத்திற்கு இலுப்பை எண்ணெய், நெய் மற்றும் நல்லெண்ணெய் இவை மூன்றும் உபயோகிக்கலாம். கடலை எண்ணெய், கடுகு  எண்ணெய், பாமாயில் போன்றவைகளைக் கொண்டு ஒரு போதும் விளக்கேற்றவே கூடாது.
 
திசைகள்:
 
கிழக்கு - இந்தத் திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் துன்பம் ஒழியும். வீட்டில் உள்ள பீடைகள் அகலும்.
 
மேற்கு - இந்தத் திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் தொல்லை, சனிபீடை, கிரகதோஷம் பங்களிப்பதை இவை நீங்கும்.
வடக்கு - இந்தத் திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் செல்வமும், மங்கலமும் பெருகும்.
தெற்கு - இந்தத் திசையில் தீபம் ஏற்றக்கூடாது.
 
விளக்கேற்றும்போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்:
 
கீடா: பதங்கா: மசகாச்ச வ்ருக்ஷ: ஜலே ஸ்தலே யே நிவஸந்தி ஜீவா: த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜன்ம பாஜாபவந்தி நித்யம் ச்வபசா ஹி விப்ரா:!!
 
பொருள்:
 
புழுக்களோ, பறவைகளோ அல்லது கொசுவோ, நம் மாதிரி உயிருள்ள ஜீவனில்லை என்று நினைக்கப்படுகிற மரமோ, தண்ணீரிலும் பூமியிலும்  எத்தனை வகையான ஜீவராசிகளோ, உயர்ஜாதி மனிதனோ, தாழ்ந்த குலத்தினனோ யாரானாலும் சரி… இந்த தீபத்தைப் பார்த்துவிட்டால் அந்த  ஜீவனுடைய சகல பாவங்களும் நிவர்த்தியாகட்டும். இன்னொரு பிறவி எடுக்காமல் பரமானந்த வடிவான அந்த இறைவனுடன் கலக்கட்டும்.
 
விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்விளக்கினின் முன்னே வேதனை மாறும் விளக்கை விளக்கும் விளக்கு உடையார்கள் விளக்கில் விளங்கும்  விளக்காவர் தாமே!

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

1000 ஆண்டு பழமையான உடைந்த ராமர் சிலை கைவிரல் பொருத்தம்.. சக்தி கொண்டு வர சிறப்பு பூஜைகள்..!

இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் செலவுகள் ஏற்படலாம்!– இன்றைய ராசி பலன்கள்(23.11.2024)!

பெண்களுக்கு திருமண வரம் கிடைக்க உதவும் கூடாரவல்லி நாள்..!

இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத திருப்பங்களால் வாழ்க்கை தரம் உயரும்!– இன்றைய ராசி பலன்கள்(22.11.2024)!

ஐயப்ப பக்தர்கள் கருப்பு உடை அணிவது ஏன்?

அடுத்த கட்டுரையில்
Show comments