Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பைரவரை வழிபட்டு வந்தால் சனி பகவானால் ஏற்படும் பாதிப்புகள் குறையுமா...?

Webdunia
சனி, 6 ஆகஸ்ட் 2022 (15:11 IST)
சனிஸ்வர பகவானின் குருநாதரான பைரவரை வழிபட்டால், ஏழரைச் சனி, அர்த்தமச் சனி, அர்த்தாஷ்டமச் சனி, கண்டச் சனி, ஜென்மச்சனி போன்றவை விலகும்.


சூரியனின் புத்திரர்கள் எமதர்மனும், சனி பகவானும். இருவரின் எமதர்மன் அழகானவர். சனியோ ஊனமாக இருந்தார். இதனால் சனி பகவானை, எமதர்மன் அலட்சியப்படுத்தினார். மனவேதனையை அடைந்த சனி பகவான் இதுபற்றி தனது தாயார் சாயாதேவியிடம் சென்று தன்நிலை குறித்து கூற வருத்தப்பட்டார்.

சாயாதேவி, ‘நீ சிவபெருமானின் வடிவமான பைரவரை உள்ளன்போடு நினைத்து வழிபட்டு வா. அவர் உனக்கு நல்ல வழியைக் காட்டுவார்’ என்று கூறினாள்.

தாயாரின் அறிவுரையை ஏற்ற சனி அன்று முதல் பைரவரை நினைத்து வழிபடத் தொடங்கினார். சனியின் வழிபாட்டில் மகிழ்ச்சி அடைந்த பைரவர், சனிக்கு அருளாசி வழங்கியதோடு அல்லாமல், அவருக்கு ஈஸ்வரன் என்ற பட்டத்தையும் வழங்கி ‘சனீஸ்வரன்’ ஆக்கினார். மேலும் சனி பகவானுக்கு நவக்கோள்களில் சக்தி மிக்க பதவியை அளித்து, அவரது பெருமையை உலகம் அறியச் செய்தார். எனவே சனிஸ்வர பகவானின் குருநாதரான பைரவரை வழிபட்டால், ஏழரைச் சனி, அர்த்தமச் சனி, அர்த்தாஷ்டமச் சனி, கண்டச் சனி, ஜென்மச்சனி போன்றவை விலகும்.

துணியில் மிளகைக் கட்டி, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, பைரவரை வழிபாடு செய்து வந்தால் வாழ்க்கையில் வளம் பெருகும். தேங்காய் முடியில் நெய் பரப்பி தீபம் ஏற்றி வழிபட்டால் ஆரோக்கிய வாழ்வு வந்தமையும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அம்மன் கோவில்களில் ஆடி மாதம் விசேஷங்கள் ஏன்?

ஜூலை மாத ராசிபலன்கள் 2024! – மீனம்!

ஜூலை மாத ராசிபலன்கள் 2024! – கும்பம்!

ஜூலை மாத ராசிபலன்கள் 2024! – மகரம்!

ஜூலை மாத ராசிபலன்கள் 2024! – தனுசு!

அடுத்த கட்டுரையில்
Show comments