சங்கடஹர சதுர்த்தி விரதத்தை எவ்வாறு கடைப்பிடிப்பது...?

Webdunia
சனி, 16 ஜூலை 2022 (13:26 IST)
விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும், விரதத்தில் மிகச் சிறந்ததும், பழமையானதும், சங்கடங்கள் அனைத் தையும் தீர்க்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் அளவு கடந்த ஆனந்தத்தை அடையலாம்.  


ஒவ்வொரு மாதமும் வரும் 'சங்கடஹர சதுர்த்தி' நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும், தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும். 'ஹர' என்ற சொல்லுக்கு அழித்தல் என்று பொருள்.

ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தி திதியே சங்கடஹர சதுர்த்தி ஆகும். அதாவது கிருஷ்ண பக்ஷத்தில் வரும் சதுர்த்தி ஆகும். செவ்வாய்கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதை 'மகா சங்கட ஹர சதுர்த்தி' என்று அழைக்கின்றனர்.

இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய் தீரும். வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகிறவர் கள் நிலையான சந்தோஷத்தை அடைய முடியும்.

மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்தி கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம், நன்மக்கட்பேறு என பலவிதமான நன்மைகளை அடைய முடியும். சனி தோஷத்திற்கு உள்ளாகிறவர் கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால், சனியின் தாக்கம் பெரும்பகுதி குறையும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்கு எடுத்து செல்லக்கூடாத பொருட்கள்: சில பாரம்பரிய நம்பிக்கைகள்

கார்த்திகை மாத சிறப்பு: ஆறுபடை வீடுகளில் முருகனை வழிபட்டால் 16 பேறுகள் நிச்சயம்!

முருகன் வழிபட்ட திருமுருகநாதர்: சுந்தரரின் திருவிளையாடல் நடந்த திருமுருகன்பூண்டி!

குலுக்கல் முறை அங்கப்பிரதட்சணம் டோக்கன்கள் ரத்து: திருப்பதி தேவஸ்தானம் முடிவு..!

இந்த ராசிக்காரர்களுக்கு வியாபார வளர்ச்சி கிடைக்கும்! - இன்றைய ராசி பலன்கள் (07.11.2025)!

அடுத்த கட்டுரையில்
Show comments