Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மந்திர உச்சரிப்பின் முழு பலனை பெறுவது எப்படி ?

Webdunia
செவ்வாய், 22 ஜூன் 2021 (23:41 IST)
ஓம் என்ற பிரணவ மந்திரம் சொல்லியே அனைத்துக் காரியங்களையும் ஆரம்பிக்க வேண்டும். தால்ப்ய பரிசிஷ்டம் என்ற நூலில் ஓம்காரத்தைச் சொல்லாமல் கூறும் சகல மந்திரங்களும் சித்தியைக் கொடுக்க மாட்டாது என்று கூறப்பட்டுள்ளது.
 
ஆகவே தான் லலிதா சஹஸ்ரநாமத்தில் வரும் ஒவ்வொரு நாமாவுக்கு முன்னரும் பின்னரும் ஸ்வாமிகள் ஓம்காரத்தைச்  சேர்த்துச் சொல்ல வேண்டும். 
 
முதலில் சொல்லாவிட்டால் மந்திரம் ஒழுகி விடுமென்றும் கடைசியில் சொல்லாவிட்டால் மந்திரம் பொங்கி வழிந்து விடும் என்றும் காளிகா புராணம் போன்றவற்றில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு மந்திரம் சொல்லும் விதத்தையும்  ஆசார்யர் மூலமாகவே கற்றுத் தெளிந்து உச்சரிக்க வேண்டும். சஹஸ்ர நாமம் சொல்லும் முன்னும் பின்னும் ஓம் என்பதை  சேர்த்து சொல்ல வேண்டும். அவ்வாறு செய்வதால் மந்திரத்தின் முழுப்பலனையும் பெறலாம்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் கோவிலில் தேர்த்திருவிழா.. அரோகரா கோஷத்துடன் வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்..!

இந்த ராசிக்காரர்களுக்கு வெளிநாடு செல்ல வாய்ப்புகள் வரும்! - இன்றைய ராசி பலன்கள் (19.03.2025)!

திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணியர்-தெய்வானை திருக்கல்யாணம்.. குவிந்த பக்தர்கள்..!

இந்த ராசிக்காரர்களுக்கு தடைப்பட்ட சுபகாரியங்கள் கைக்கூடும்! - இன்றைய ராசி பலன்கள் (18.03.2025)!

ஒப்பிலியப்பன் கோவிலில் இன்று பங்குனி பெருவிழா கொடியேற்றம்: தேரோட்ட தேதியும் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments