எவ்வாறு தூங்கக் கூடாது ... சித்தர்கள் கூறிய த்கவல்

Webdunia
புதன், 7 ஜூலை 2021 (23:44 IST)
தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று. பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலைதான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும்.
 
சித்தர் பாடல்:
 
சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக் 
கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரை 
நாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரை 
நம்பிக் காண்
 
இதன் விளக்கம்: இரவில் நித்திரை செய்யாதவர்களிடத்தில் புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில் சோர்வு, பயம், படபடப்பு, அக்னி  மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் பற்றும். வேட்டைக்குச் செல்லும் வேடருடைய நாய்கள் இரையைக் கவ்வுதல்  போல் இரவில் நித்திரையில்லாதவரை பற்பல நோய்கள் கவிக் கொள்ளும்.
 
எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர். கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது. தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும். மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு, அதிர்ச்சி உண்டாகும். வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது.
 
வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப் படுவதுடன், இதயக் கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி உண்டாகும். மேலும் மல்லாந்து கால்களையும், கைகளையும் அகட்டி வைத்துக் கொண்டு  தூங்கக் கூடாது.இதனால் இவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் உடலுக்குக் கிடைக்காமல் குறட்டை உண்டாகும். குப்புறப் படுக்கக் கூடாது,  தூங்கவும் கூடாது.
 
இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்து படுத்து தூங்கவேண்டும். இதனால்  வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இதில் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம் வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும்.  மேலும் இதனால் உடலுக்குத் தேவையான வெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை அதிகரிக்கச்செய்து உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும். இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும்.
 
வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும். இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்லும். இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும். இரவில் உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப் போய் விஷமாக நேரிடும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈஷா மஹாசிவராத்திரி!.. ஆதியோகி ரத யாத்திரை !.. திருநெல்வேலிக்கு 23-ஆம் தேதி வருகை ..

ஈஷா மஹாசிவராத்திரி!.. வேலூருக்கு வரும் ஆதியோகி ரத யாத்திரை !...

ஏப்ரல் மாதம் திருப்பதி கோவிலுக்கு போறீங்களா?!.. டோக்கன் மற்றும் தங்கும் அறைகள் விபரம்!..

தை அமாவசையில் முன்னோருக்கு சமர்ப்பணம்!.. ராமேஸ்வரத்தில் குவிந்த மக்கள்!..

தைப்பொங்கல் தினத்தில் களை கட்டும் திருச்செந்தூர் முருகன் கோவில்... குவிந்த பக்தர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments