Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வராகி அம்மனின் தோற்றம் எவ்வாறு உள்ளது தெரியுமா...?

Webdunia
திங்கள், 18 ஜூலை 2022 (12:00 IST)
வராகமூர்த்தியின் சக்தி. கறுப்பு நிறமானவர். பன்றியின் முகத்தினை ஒத்த முகத்தி னையும் பெரிய வயிற்றினையும் கொண்டிருப்பார். இவருக்கு ஆறு கரங்கள் காணப்படும்.


வலது கரங்களில் ஒன்று வரத முத்திரையிலிருக்கும். மற்றையனவற்றில் தண்டம், வாள் என்பன இடம் பெற்றிருக்கும். இடது கரங்களில் ஒன்று அபய முத்திரையினைக் காட்ட மற்றையன கேடயம், பாத்திரம் என்பனவற்றினை ஏந்தியவாறு காணப்படும்.

இவர் எருமையை வாகனமாகக் கொண்டிருப்பார் என வராகியினைப்பற்றி ஸ்ரீ தத்துவநிதி விபரிக்கின்றது. தண்டநாத வராகி, சுவப்ன வராகி, சுத்த வராகி என்னும் மேலும் மூன்று வகையான வராகியை இந்நூலில் கூறப்படுகின்றது.

தண்டநாத வராகி பொன்னிறமானவர். பன்றியின் முகத்தினை ஒத்த முகத்தைக் கொண்டிருப்பார். இவரது கரங்களில் சங்கு, சக்கரம், கலப்பை, உலக்கை, பாசம், அங்குசம், தண்டம் என்பன காணப்படும். இரு கரங்கள் அபய, வரத முத்திரையில் இருக்கும்.

சுவப்ன வராகி மேக நிறமானவர். மூன்று கண்களைக் கொண்டிருப்பார். பிறைச்சந் திரனைச் சூடியிருப்பார். வாள், கேடயம், பாசம், அரிவாள் என்பன கரங்களில் இடம் பெற்றிருக்கும். இரு கரங்கள் அபய, வரத முத்திரையிலிருக்கும்.

சுத்த வராகி நீல நிறமானவர். பன்றியின் முகத்தினை ஒத்த முகத்தினைக் கொண்டவர். வெண்மையான பற்கள் வெளியே நீட்டப்பட்டவாறிருக்கும். தலையில் பிறைச் சந்திரனை சூடியிருப்பார். சூலம், கபாலம், உலக்கை, நாகம் என்பன கரங்களிற் காணப்படும்.

தொடர்புடைய செய்திகள்

வைகாசி விசாகம்: முருகன் அருளை பெற செய்ய வேண்டிய விரதங்கள் மற்றும் வழிபாட்டு முறைகள்!

இந்த ராசிக்காரர்களுக்கு தேவையான பண உதவி கிடைக்கும்! - இன்றைய ராசி பலன் (20.05.2024)!

இந்த ராசிக்காரர்களுக்கு காரிய அனுகூலம் உண்டாகும்! - இன்றைய ராசி பலன் (19.05.2024)!

வைகாசி விசாகத்தின் சிறப்புகள் என்னென்ன?

இந்த ராசிக்காரர்களுக்கு தொழில் வியாபாரத்தில் சுமாரான போக்கு காணப்படும்! - இன்றைய ராசி பலன் (18.05.2024)!

அடுத்த கட்டுரையில்
Show comments