செல்வம் பெருக இதை செய்யுங்கள்...

Webdunia
சனி, 21 ஆகஸ்ட் 2021 (00:16 IST)
பசும் பாலை சுக்ர ஓரையில் வில்வ மரத்திற்கு ஊற்றவும். 24 வெள்ளிக் கிழமை செய்திட நிச்சியமாக பணம் வரும்.
 
பாசி பருப்பை ஒரு பச்சை பையில் மூட்டையாக கட்டி தலையடியில் வைத்து உறங்கி மறு நாள் அதனை ஒரு பிளாஸ்டிக் பையில் கொட்டி மூடி ஓடும் நீரில் விடவும் பணப்பிரச்சனை தீரும்.
 
 
தினசரி குளிக்கும் முன் பசுந் தயிரை உடல் முழுவதும் தடவி சிறிது நேரம் சென்று குளிக்க தரித்திரம் விலகும். குளித்தவுடன் முதுகை முதலில் துடைக்கவும் தரித்திரம் விலகும்.
 
தமிழ் மாதத்தில் முதல் திங்கட் கிழமை என தொடர்ந்து 12 மாதமும் திங்கட்கிழமை திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கவும் நீங்கள் உறுதியாக கோட்டீஸ்வரர் ஆகலாம். பூர்வ புண்ணியம் இல்லாதவர் கூட லட்சாதிபதி ஆகலாம்.
 
அம்திஸ்ட் கல் 10 கேரட் வாங்கி பணப் பெட்டியில் வைக்க பணம் ஆகர்ஷணம் ஆகும். சீக்கிரம் செலவு ஆகாது. குடியிருக்கும் வீட்டில் வட கிழக்கு பகுதியில் கிணறு,நெல்லி மரம், வில்வ மரம் இருக்க அந்த வீட்டில் லஷ்மி கடாட்சம் ஏற்படும்.
 
தினமும் காலையில் வெங்கடேச சுப்ரபாதம், விஷ்ணு சஹஸ்ரநாமம் ஒலிக்கும் வீட்டில் லஷ்மி நித்தமும் வாசம் செய்வாள். மகாலட்சுமிக்கு இளஞ் சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி வழிபடவசிய முண்டாகி செல்வ வரத்து உண்டாகும்.
 
அவரவர் நட்சத்திர தன தாரை ஓரை வெள்ளிக் கிழமை வரும் வேளையில் அரசமரத்தடி விநாயகருக்கு அகலில் 11 தீபமும், 11 முறை வலம் வந்து வழிபட்டால் பணவரவு நிரந்தரமாகும்.
 
வீட்டில் தலை வாசல் படியில் கஜலஷ்மி உருவத்தை வெள்ளி தகட்டில் பதித்து வைத்தால் செல்வம் சேர்ந்து கொண்டே இருக்கும். ஒவ்வொரு மாதத்தில் வரும் பெளர்ண மியன்று சத்தியநாராயண பூஜை செய்ய செல்வங்களை பெறலாம். ஐப்பசி மாத வளர் பிறையில் மகா லட்சுமியை வழிபட செல்வம் பெருகும்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஷபம் ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2026: சவால்களை வென்று சாதனை படைக்கும் ஆண்டு!

கோபம் குறைய வேண்டுமா? இந்த கோவிலுக்கு செல்லுங்கள்.. மன அமைதி கிடைக்கும்..!

மேஷம் ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2026: துணிச்சலும் வேகமும் நிறைந்த ஆண்டு!

மாதவரம் கரிவரதராஜ பெருமாள்: பாவங்களை போக்கி வரம் அருளும் தேன் உண்ட பெருமாள்!

ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் 453 சவரன் எடை கொண்ட தங்க அங்கி.. குவிந்த பக்தர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments