Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமாவாசையில் வாகனங்கள் வாங்க கூடாது என்று சொல்ல காரணம் என்ன தெரியுமா...!

Webdunia
பஞ்சாங்கத்தில் நேத்திரம், ஜீவன் என்ற கணக்கு ஒன்று உண்டு. அதாவது கண்கள், உயிர் என பொருள்படும். நேத்திரம் என்றால் கண். இது பஞ்சாங்கத்தில் 2-1, 1-0 என்ற வரிசையில் தினசரி குறிக்கப்பட்டிருக்கும்.

 
அமாவாசை தினத்தில் மட்டும் 0-0 என குறிக்கப்பட்டிருக்கும். எனவே அமாவாசை நேத்திர ஜீவன் இல்லாத நாளாகும். கண்களும்,  உயிரும் இல்லாத நாள் அமாவாசை. 
 
நேத்திர ஜீவன் இல்லாத நாளில் தொடங்கும் காரியம் தோல்வி அடையும். வாங்கும் பொருள் நிலைக்காது. விபத்து உண்டாகும்.  எனவே கண்ணில்லாத அமாவாசை தினத்தில் கோயிலில் வழிபடலாமே தவிர வாகனங்களை வாங்கி பூஜை போடுதல் தவறு.அது நிலையில்லாதது. கண்ணில்லாமல் வண்டி ஓட்டுவதை போன்றது.
 
முன்னோர்களுக்குரிய வழிபாட்டினை மேற்கொள்ள சிறப்பான நாள் அமாவாசை. இந்தநாளில் முன்னோர்களை நினைத்து புனித  நீர் நிலையில் தர்ப்பணங்கள் செய்தால் பிதுர்தோஷம் நிவர்த்தியாவதுடன், முன்னோரின் ஆசியும் கிட்டுமென்று தர்மநூல்கள் கூறுகின்றன. 
 
மாதந்தோறும் வரும் அமாவாசைகளில், தை, ஆடி, புரட்டாசி அமாவாசைகள் மிகவும் சிறப்பானவை. இதில் மகாளயபட்ச அமாவாசையென்று சொல்லப்படும் புரட்டாசி மாத அமாவாசைக்கு கூடுதல் சிறப்புண்டு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐயப்ப பக்தர்கள் கருப்பு உடை அணிவது ஏன்?

இந்த ராசிக்காரர்களுக்கு வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறும்!– இன்றைய ராசி பலன்கள்(21.11.2024)!

இந்த ராசிக்காரர்களுக்கு புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு வரும்!– இன்றைய ராசி பலன்கள்(20.11.2024)!

அய்யப்பன் வழிபாட்டில் பேட்டை துள்ளல்.. முக்கிய சடங்கின் முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments