Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாரியம்மன் வழிபாட்டில் பக்தர்கள் செலுத்தும் நேர்த்திக்கடன்கள்..!

Mahendran
சனி, 22 மார்ச் 2025 (19:33 IST)
மாரியம்மன் வழிபாட்டில் பக்தர்கள் செலுத்தும் நேர்த்திக்கடன்கள், இறைவி உடன் அவர்களின் உள்ளார்ந்த தொடர்பை வெளிப்படுத்தும் முக்கிய அம்சமாக இருக்கின்றன.
 
மாவிளக்கு வழிபாடு, மாரியம்மன் கோயில்களில் மிகப்பிரசித்தமானதொன்றாகும். இதற்கு, மாவு, வெல்லம், நெய் சேர்த்துப் பிசைந்து சிறிய விளக்காக உருவாக்கி, அதன் நடுவில் நெய்விட்டு தீபமாக ஏற்றுவர். இதில் பக்தர்கள் தங்களது வேண்டுதலைச் சமர்ப்பித்து, தீபம் முழுமையாக எரிந்த பிறகு, மற்ற பக்தர்களுடன் பகிர்ந்து கொள்வர்.
 
பொங்கல் சமயத்தில், அம்மனை வழிபடுத்து, புதிய மண் பானையில் பொங்கல் வைக்கப்படுகிறது. அதை அம்மனுக்குப் படைத்து, பக்தர்கள் மங்கள இசையுடன் மகிழ்ச்சியாக கொண்டாடுவர்.
 
பால்குடம் எடுத்தல், பக்தர்களின் இறைநம்பிக்கையை வெளிப்படுத்தும் வழிபாடாகும். பாலை தலையில் வைத்து கொண்டு கோயிலுக்கு சென்று, அம்மனுக்கு அபிஷேகம் செய்வது வழக்கம்.
 
தீச்சட்டி எடுத்தல் என்பது, தீயை இறைவிக்காக எடுக்கும் ஒரு நேர்த்திக்கடன். தீயின் சூடு பக்தர்களுக்கு எதுவும் ஆகாது என நம்பப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்களுக்கு எதிலும் நன்மை உண்டாகும்!- இன்றைய ராசி பலன்கள் (07.05.2025)!

அக்னி நட்சத்திரத்தில் அண்ணாமலையாரை குளிர்விக்கும் அபிஷேகம்.. பக்தர்கள் வழிபாடு..!

இந்த ராசிக்காரர்களுக்கு இயந்திரம், நெருப்பில் கவனமாக இருக்கவும்!- இன்றைய ராசி பலன்கள் (06.05.2025)!

19 ஆண்டுகள் கழித்து பாபநாசம் சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்: குவிந்த பக்தர்கள்..!

இந்த ராசிக்காரர்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை!- இன்றைய ராசி பலன்கள் (05.05.2025)!

அடுத்த கட்டுரையில்
Show comments