Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாழ்வில் நமக்கு வருகின்ற தடைகளை தகர்த்தெறியும் சக்கரத்தாழ்வார் வழிபாடு !!

Webdunia
வியாழன், 4 ஆகஸ்ட் 2022 (15:27 IST)
ஆடி சித்திரை நட்சத்திர நன்னாளான இன்று சக்கரத்தாழ்வாரை மனதார வேண்டுங்கள். மங்கல காரியங்களை நடத்தித் தந்திடுவார். மங்காத செல்வங்களை வாரி வழங்கிடுவார்.


சக்கரத்தாழ்வாருக்கு உரிய நட்சத்திரம் சித்திரை. ஆனி மாத சித்திரை நட்சத்திரம் சக்கரத்தாழ்வார் ஜென்ம ஜயந்தித் திருநாள். மாதந்தோறும் வருகிற சித்திரை நட்சத்திர நன்னாளில், சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

எல்லா பெருமாள் கோயில்களிலும் சக்கரத்தாழ்வாரு க்கு தனிச்சந்நிதி அமைந்திருக்கும். ஸ்ரீரங்கம் கோயிலின் சக்கரத்தாழ்வார் மிகுந்த சாந்நித்தியம் மிக்கவர். அரங்கனைத் தரிசித்து வழிபடுவதற்கு வாரந்தோறும் பக்தர்கள் தொடர்ந்து வருவது போல், வாரந்தோறும் சக்கரத்தாழ்வாரை தரிசித்துப் பிரார்த்திக்க ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

சுதர்சனச் சக்கரம் என்பதே சக்கரத்தாழ்வார். மகாவிஷ்ணுவின் திருப்பாதத்தை தரிசிப்பதும் பிரார்த்திப்பதும் எத்தனை விசேஷமோ அதேபோல், சக்கரத்தாழ்வாரை பூஜித்து வருவதும் விசேஷமானது. நம் வாழ்வில் நமக்கு வருகிற எதிர்ப்புகளையும் எதிரிகளையும் அழித்து நமக்கான தடைகளையெல்லாம் தகர்த்தருள்வார் சக்கரத்தாழ்வார்.

சக்கரத்தாழ்வார் மந்திரம்:

ஓம் சுதர்ஸனாய வித்மஹே.
மஹா ஜ்வாலாய தீமஹி
தந்நோ சக்ர ப்ரஸோதயாத்:

தினமும் 11 முறை அல்லது 24 முறை அல்லது 54 அல்லது 108 முறை என முடிந்த அளவுக்கு சொல்லி சக்கரத்தாழ்வாரை வழிபடலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்களுக்கு படிப்பில் மிகுந்த கவனம் தேவை! - இன்றைய ராசி பலன்கள் (29.03.2025)!

நாளை சூரிய கிரகணம்.. பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி உண்டா?

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – தனுசு!

இந்த ராசிக்காரர்களுக்கு உறவினர்களுடன் வாக்குவாதம் ஏற்படலாம்! - இன்றைய ராசி பலன்கள் (28.03.2025)!

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா.. குவிந்த பக்தர்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments