Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பவர்களுக்கு அஷ்டமா சித்திகள் கை கூடுமா...?

Webdunia
புதன், 14 செப்டம்பர் 2022 (12:31 IST)
காயத்ரி மந்திரத்திற்கு சாவித்ரி என்றும் சரஸ்வதி என்றும் பெயர்கள் உண்டு. இந்த மந்திரம் காலையில் காயத்ரிக்காகவும், நடுப்பகலில் சாவித்ரிக்காகவும், மாலை சந்தியா வந்தனத்தில் சரஸ்வதிக்காகவும் ஜபிக்கப்படுகிறது.


காயத்ரி மந்திரம் சொல்வதால் பூர்வ ஜென்ம பாவங்கள் நீங்குகிறது. நாம் எதிர்நோக்கியிருக்கும் ஆபத்துகள் நீங்கும் என்பது ஐதீகம். து தவிர உடல் ரீதியாகவும் பலன்கள் ஏற்படும்.

காயத்ரி மந்திரத்தை இந்த பூமிக்கு அறிமுகப்படுத்தியவர் விஸ்வாமித்திரர். அவர் ஆகாயத்தில் சூட்சும ஒலியாக தியான நிலையிலிருந்து இதனைக் கண்டறிந்தார். காலை, மதியம், மாலை சந்தியா வந்தனம் செய்துவரும் பிராமணர்கள் காயத்ரி மந்திரத்தினை ஜபிக்கின்றனர். காயத்ரி மந்திரத்தை குருவின் மூலம் உபதேசம் பெற்று ஜபிக்கலாம். காயத்ரி மந்திரத்தை ஜபிப்பவர்கள் ஒழுக்க நெறியுடனும், உள்ளத்தூய்மையுடனும் இருக்க வேண்டும்.

தினசரி காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பவர்களுக்கு அஷ்டமா சித்திகள் கை கூடி வரும். சகல ஐஸ்வர்யங்களும் மன நிம்மதியும் கிடைக்கும்.

காயத்ரி மந்திரம்:

 ஓம் பூர்: புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ: யோந: ப்ரசோதயாத்..!

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அருள் தரும் ஆவணி தமிழ் மாத ராசிபலன்கள் 2025! – கடகம்

இந்த ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்! இன்றைய ராசி பலன்கள் (16.08.2025)!

அருள் தரும் ஆவணி தமிழ் மாத ராசிபலன்கள் 2025! – மிதுனம்

அருள் தரும் ஆவணி தமிழ் மாத ராசிபலன்கள் 2025! – ரிஷபம்

அருள் தரும் ஆவணி தமிழ் மாத ராசிபலன்கள் 2025! – மேஷம்

அடுத்த கட்டுரையில்
Show comments