Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விரதம் இருப்பதால் ஏற்படும் நன்மைகள்

விரதம் இருப்பதால் ஏற்படும் நன்மைகள்

Webdunia
விரதம். அது நம் உடலுக்குள் இயங்கும் இயந்திரங்களை சுத்தப்படுத்துவதற்கும், சுத்திகரிப்பதற்கும் உருவான ஒரு அறிவியல் முறை.


 
 
மனம் பொறிவழி போகாது நிற்றற் பொருட்டு, உணவை விடுத்தேனுஞ் சுருக்கியேனும் மனம், வாக்கு, காயம் என்னும் மூன்றினாலும் கடவுளை மெய்யன்போடு விதிப்படி வழிபடுதல் விரதமாகும்.
 
விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள் ஐம்புலன்களையும் அடக்கி, திரிகரண சுத்தியுடன் இருத்தல் வேண்டும். மன அடக்கத்தை மேம்படுத்த முடியும். பெரியோர் கூறும் புண்ணியம் ஏழினுள் ஒன்று. விரதம் அனுஷ்டிப்பதனால் மனம் புத்தி முதலிய உட்கருவிகள் தூய்மை அடையும். இதனால் ஞானம், நல்லறிவு கைகூடும்.
 
மிருகங்கள் முதற்கொண்டு மனிதர்கள் வரை உடல் நோய்வாய்ப்ப்படும்போது சாபிடாமல் அல்லது குறைந்த உணவு உட்கொள்வது பழக்கம். அதை நாம் ஒரு ஒழுங்கு முறையாக செய்தோமானால் நமது உடல் மீண்டும் நல்ல நிலைக்கு வந்துவிடும். இதுவே உடலின் இயங்கும் முறையாகும். 
 
அறிவியலாளர்கள் ஒரு உண்மையை தற்சமயம் கண்டு பிடித்திருக்கிறார்கள். அது என்னவென்றால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாப்பிட்டால் அது எலி உடம்பில் இருக்கும் புற்று நோயின் அளவை குறைக்கிறது. 
 
நம்ப முடிய வில்லையா? 
 
இந்த முறையால் நமது புற்றுநோய்க்கு கூட விடை கிடைக்கலாம்.
 
எனவே வாரத்துக்கு ஒரு முறையாவது உங்கள் உடலுக்கு உணவிடம் இருந்து விடுதலை கொடுங்கள். பிறகு பாருங்கள் வித்தியாசத்தை. ஆனால் சர்க்கரை நோயாளிகள் அவரவர் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று இதை கடைபிடியுங்கள்.

வைகாசி மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மீனம்!

வைகாசி மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – கும்பம்!

வைகாசி மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

வைகாசி மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – தனுசு!

வைகாசி மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – விருச்சிகம்!

Show comments