Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளா பகவதி அம்மன் கோவிலில் மாசி பொங்கல் திருவிழா..!

Mahendran
சனி, 8 மார்ச் 2025 (17:30 IST)
மகாவிஷ்ணுவின் அவதாரமான பரசுராமர், 108 சிவாலயங்களும், 108 பகவதி அம்மன் கோவில்களும் நிறுவியதாக கூறப்படுகிறார். இவரால் உருவாக்கப்பட்ட பகுதி தான் இன்றைய கேரளா, இது ‘கடவுளின் தேசம்’ என அழைக்கப்படுகிறது. கேரளாவின் பல பகவதி அம்மன் கோவில்களில், திருவனந்தபுரம் அருகிலுள்ள ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் உலகப்புகழ் பெற்றது.
 
சிலப்பதிகாரத்தின் நாயகியான கண்ணகியே, ஆற்றுக்கால் பகவதி அம்மன் எனக் கருதப்படுகிறார். மதுரையை எரித்த பிறகு, கண்ணகி இங்கு ஓய்வெடுத்ததாகவும், அதன் நினைவாக கோவில் உருவானதாகவும் கூறப்படுகிறது. மேலும், ஒரு பக்தருக்கு கனவில் தோன்றிய அம்மன், குறிப்பிட்ட இடத்தில் கோவில் எழுப்பும்படி கூறியதாகவும் ஐதீகம் உள்ளது.
 
இந்த ஆலயத்தில் மாசி மாதத்தில் நடைபெறும் பொங்கல் திருவிழா உலகப் பிரசித்தி பெற்றது. இதன்போது, லட்சக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபடுவது முக்கிய நிகழ்வாகும். 1997-ம் ஆண்டு 15 லட்சம் பெண்கள் மற்றும் 2009-ம் ஆண்டு 30 லட்சம் பெண்கள் பொங்கல் வைத்த நிகழ்வு, உலக சாதனையாக பதிவு செய்யப்பட்டது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்களுக்கு கடன் பாக்கிகள் வசூலாகும், செல்வம் பெருகும்! - இன்றைய ராசி பலன்கள் (05.03.2025)!

கும்பகோணம் மகாமகக் குளம் காசி விஸ்வநாதர் கோவிலில் மாசி மகம் விழா..!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி பெரும் திருவிழா.. 12 நாட்கள் நடைபெறும்..!

இந்த ராசிக்காரர்களுக்கு புது நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைக்கும்! - இன்றைய ராசி பலன்கள் (03.03.2025)!

இந்த ராசிக்காரர்களுக்கு வீடு பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும்! - இன்றைய ராசி பலன்கள் (02.03.2025)!

அடுத்த கட்டுரையில்
Show comments