Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைந்து இளமையான தோற்றத்தை பெற...!!

Webdunia
சரும ஆரோக்கியத்திற்கு எண்ணெய் சத்து மிகவும் அவசியம். ஒவ்வொரு வகையான எண்ணெய்யிலும் பல நன்மைகள் நிறைந்திருக்கின்றன. அதில் வைட்டமின் ஈ  எண்ணெய்யில் இருந்து நமக்குக் ஏராளாமான நன்மைகள் கிடைக்கின்றன.

இயற்கையாகவே வைட்டமின் ஈ சத்து நிறைந்துள்ள உணவுப் பொருட்களில் இருந்து இந்த எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது.

வைட்டமின் ஈ மாத்திரை சருமத்திற்கு மிக சிறந்த அழகு சாதன பொருளாக விளங்குகிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் கூந்தல் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
 
வைட்டமின்  ஈ கேப்ஸ்யூலை பிரித்து அதிலிருந்து என்ணெயை எடுத்து அதனுடன் சிறிது மஞ்சள் பொடியை கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவவும். இதனை தொடர்ந்து செய்துவர கரும்புள்ளிகள் விரைவில் மறைந்து விடும்.
 
பளபளப்பான சருமத்திற்கு : காபி தூள், ஒரு விட்டமின் ஈ கேப்ஸ்யூல் மற்றும் இரண்டு ஸ்பூன் ரோஸ் வாட்டர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவையை முகத்தை அப்ளை செய்து நன்கு ஸ்க்ரப் செய்து பின்னர் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்தில் ஒரு முறை செய்து வர  சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, சருமம் பளபளப்பாக  காணப்படும்.
 
சுருக்கங்கள் மறைய : விட்டமின் ஈ எண்ணெயை முகத்தில் தேய்த்து இரவு முழுவதும் அப்படியே விடுங்கள். மறுநாள் காலை முகத்தை கழுவலாம். இப்படி செய்வதனால் முகத்தில் இருக்கும் சின்ன சுருக்கங்களும் மறைந்து இளமையான தோற்றத்தை பெற முடியும். 

தொடர்புடைய செய்திகள்

இரவில் புரோட்டா சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

சின்ன வெங்காயம் சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதா?

கால்கள் மரத்து போகாமல் இருக்க சரியான உடற்பயிற்சி எவை எவை?

நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் என்னென்ன நன்மைகள்?

வியர்வை நாற்றத்தில் இருந்து உடலை பாதுகாக்கும் வழிமுறைகள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments