Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமையலறையில் பயன்படும் உப்பை கொண்டு சருமத்தினை பராமரிப்பது எப்படி....?

Webdunia
நம் வீட்டின் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டே சருமத்தை எளிதாக பராமரித்து அதன் அழகை மேம்படுத்த முடியும். அந்த வகையில் உணவிற்கு சுவையைத் தர பயன்படும் உப்பு, அழகை அதிகரிக்க பெரிதும் உதவியாக இருக்கிறது.
உப்பு கொண்டு ஸ்கரப் செய்வதால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள், சொரசொரப்பாக இருக்கும் சருமம் போன்றவை நீங்குவதோடு, சருமம் மென்மையாக வறட்சியடையாமல் பட்டுப்போன்று இருக்கும்.
 
நேச்சுரல் மௌத் வாஷ் வாய் துர்நாற்ற பிரச்சனை இருந்தால், அதை உப்பு கொண்டு எளிதில் போக்கலாம். அதற்கு 1/4 கப் நீரில்  1/2 டீஸ்பூன்  உப்பு மற்றும் 1/2 டீஸ்பூன் பேக்கிங் பவுடர் சேர்த்து நன்கு கலந்து, அந்நீரால் கழுவ வேண்டும்.
 
நமது தலை முடி பிரச்சனைகள் பல உண்டாக, நமது தலையில் உள்ள அதிகமான எண்ணெய் பசை தான் காரணம். அதற்கு நாம்  உபயோகிக்கும் ஷாம்பூவுடன் உப்பினை 2-3 டேபிள் ஸ்பூன் கலந்து , தலைக்கு தேய்த்து குளிக்கவும். இப்படியே வாரத்திற்கு ஒருமுறை  செய்தால் எண்ணெய் பசை நீங்கி கூந்தல் பிரச்சனைகள் சரியாகிவிடும்.
 
சருமம் பொலிவிழந்து இருப்பதை சரி செய்ய, சருமத்தின் மீதுள்ள இறந்த செல்களை முழுமையாக நீக்க வேண்டும். அதற்கு 2 ஸ்பூன் கல்  உப்புடன் ½ கப் தேங்காய் எண்ணெய் கலந்து, அதைக் கொண்டு உடலை தேய்த்து கழுவி வர இறந்த செல்கள் நீங்கி சருமம் பொலிவுடன்  மின்னும்.
 
கண்களை சுற்றியுள்ள கருவளையம் போக ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெயில் மஞ்சள்பொடி, சிறிதளவு உப்பு கலந்து மசாஜ் செய்தால்  கருவளையம் காணாமல் போய் விடும்.
 
2 கப் கல் உப்பு, 1 1/3 கப் கற்றாழை ஜெல், 2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு சருமத்தை ஸ்கரப் செய்தால்,  சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் நீங்கி, சருமம் அழகாக இருக்கும்.
 
நம் பாதங்களின் அழகை கெடுக்கும் அழுக்கினை நீக்க மற்றும் குதிகால் வெடிப்பினைப் போக்க, உப்புடன் ஆலிவ் எண்ணெய் சம அளவில்  கலந்து, பாதங்களில் மெதுவாக தேய்த்து ஊற வைத்து கழுவுங்கள். இப்படியே வாரம் 2-3 தடவை செய்தால் பாதங்கள் அழகாய் தோன்றும்.
 
வெட்டுக் காயங்களில் விரைவில் தொற்று நோய்கள் ஏற்படுவதை தவிர்க்க, கொஞ்சம் தண்ணீரில் உப்பு கலந்து காயங்கள் மீது ஊற்றுங்கள். கொஞ்சம் எரிந்தால் பொறுத்துக்கொள்ளவும். உப்பு தன் (மருந்து) வேலையை செய்வதற்கான அறிகுறி அது.
 
பல நாட்களாக தலை வலியினால் அவதிப்பட்டால் 1 டம்பளர் தண்ணீரில் உப்பு சிறிது கலந்து குடியுங்கள். விரைவில் தலை வலி நீங்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரத்த அழுத்தத்தை தவிர்க்க கடைப்பிடிக்க வேண்டிய 4 விஷயங்கள்..!

செல்போன் அதிகம் பயன்படுத்தினால் முகப்பரு வருமா? அதிர்ச்சி தகவல்..!

மதுபானத்திற்கும் மறதிக்கும் தொடர்பு உண்டா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

வெந்தயம், கருஞ்சீரகம் சர்க்கரையை கட்டுப்படுத்தும் என்பது உண்மையா?

அடுத்த கட்டுரையில்
Show comments