Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூந்தல் உதிர்வை தடுத்து நன்கு வளர உதவும் எண்ணெய் வகைகள் என்ன...?

Webdunia
சின்ன வெங்காயத்தை அரைத்து தலைப்பகுதியில் தடவி அரை மணி நேரம் ஊறவைத்து குளித்து வர பொடுகும் அதனால் ஏற்படும் முடி கொட்டுதலும் நிற்கும்.  

செம்பருத்தி இலையை அரைத்து தலையில் தடவி அரை மணி நேரம் கழித்து தலைக்கு குளிக்க வேண்டும். இவ்வாறு வாரம் ஒருமுறை குளித்து வந்தால் தலை  முடி கொட்டுவது நின்று நன்கு பளப்பாக மாறும்.
 
வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைத்து அரைத்து எடுத்துக் கொண்டு தலையில் தேய்த்து குளித்து வர முடி கொட்டுவது நின்று முடி நன்கு வளர தொடங்கும்.
 
பாதாம் எண்ணெய்யை தலையின் வேர்க்காலில் தேய்த்து நன்றாக ஊறவைத்து குளித்து வர முடி கொட்டுவது நிற்கும்.
 
இரவு தூங்க செல்வதற்கு முன் சுத்தமான தேங்காய் எண்ணெய்யை லேசாக தலையில் தேய்த்து மசாஜ் செய்து வந்தால் முடி கொட்டுவது நின்று தலை முடி  வலுவாகும்.
 
கற்றாழையின் நடுவில் உள்ள ஜெல்லை அரைத்து தலையில் தேய்த்து சிறிது நேரம் ஊற வைத்து பின் குளித்து வர வேர்க்கால்கள் வலுப்பெற்று முடி உறுதியாகும். தலை முடிக்கு குளிர்ச்சி உண்டாகும். தலையில் உண்டாகும் அதிகப்படியான வெப்பத்தை கட்டுப்படுத்தி முடி உதிர்வதை தடுக்கும்.
 
படுக்கும் முன் கூந்தலுக்கு எண்ணெய் தேய்த்து மசாஜ் போல் செய்ய வேண்டும். இவ்வாறு மூன்று வாரம் தொடர்ந்து செய்தால் கூந்தல் உதிர்வது நின்றுவிடும். மேலும் கூந்தலும் ஆரோக்கியமாக இருக்கும். வாரத்திற்கு ஒரு முறை எண்ணெய்யை சூடு செய்து தடவி, எண்ணெய் குளியல் எடுக்கலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடற்பயிற்சி செய்தாலும் மாரடைப்பு வரும்.. காரணம் இதுதான்..!

மூட்டு வலி முதல் புற்றுநோய் வரை அனைத்தையும் குணமாக்கும் இஞ்சி..!

பித்தப்பை கல்லை இயற்கையாக அகற்றுவது எப்படி?

பற்களை சரியாக பராமரிக்காவிட்டால் மூட்டு வலி வருமா?

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments