Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைமுடி உதிர்வு போன்ற பிரச்சனைகளை தீர்க்கும் எண்ணெய் வகைகள் !!

Webdunia
சுற்றுச்சூழல் மாசு, சரியான பராமரிப்பு இல்லாதது போன்றவைகளே, இந்த பிரச்சனைகளுக்கு பெரும் காரணம். அதுமட்டுமல்லாமல், கூந்தலுக்கு போதிய சத்துக்கள் நிறைந்துள்ள உணவுகளையும் சரியாக சாப்பிடுவதில்லை போன்ற பிரச்சனைகளால் தலைமுடி உதிர்வு போன்ற பிரச்சனைகள் உண்டாகின்றன. 

நெல்லிக்காய் எண்ணெய்: கூந்தல் உதிர்தல் பிரச்சனைகளுக்கு நெல்லிக்காய் எண்ணெய் சரியானதாக இருக்கும். இந்த எண்ணெய்யை இரவில் படுக்கும் முன்  தலைக்கு தடவி நன்கு மசாஜ் செய்து பின்னர் தூங்க வேண்டும். இதனால் ஒரு நல்ல பலன் கிடைக்கும்.
 
தேங்காய் எண்ணெய்: அனைவருக்கும் நன்கு தெரிந்த எண்ணெய் என்றால் அது தேங்காய் எண்ணெய் தான். தேங்காய் எண்ணெய்யை வாரத்திற்கு ஒரு முறை தடவி, மசாஜ் செய்து குளித்து வர வேண்டும். வேண்டுமென்றால், தேங்காய் எண்ணெய்யுடன் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு மசாஜ் செய்தால், பொடுகு  போய்விடும்.
 
கடுகு எண்ணெய்: கூந்தல் உதிர்தலுக்கு கடுகு எண்ணெயுடன், மருதாணியை சேர்த்து, தேய்த்து வந்தால், கூந்தல் உதிர்தல் ஏற்படாமல் தடுக்கலாம். அது எப்படியென்றால், முதலில் கடுகு எண்ணெய்யுடன், சிறிது மருதாணி இலைகளை போட்டு, காயவைத்து, பின் அதில் உள்ள இலைகளை நீக்கி, ஸ்கால்ப் மற்றும்  கூந்தலுக்கு தடவ வேண்டும்.
 
ஆமணக்கு எண்ணெய்: கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்த எண்ணெய் ஆமணக்கெண்ணெய் தான். இந்த எண்ணெய்யை ஸ்கால்பிற்கு மட்டும் தடவ வேண்டும். இதனை அதிக நேர வைத்திருப்பதால் சளி பிடிக்கும் ஆபத்தும் உள்ளது.
 
மீன் எண்ணெய்: மீன் எண்ணெய் கூந்தல் உதிர்வதை நிறுத்தி, முடி வளர்ச்சியில் பெரிதும் பயன்படுகிறது. இதனை பயன்படுத்துவதால் கூந்தல் நாற்றத்தை தாங்க முடியாது தான். ஆகவே அதற்கு பதிலாக மீன் எண்ணெய் மாத்திரைகளை வாங்கி சாப்பிடலாம். இதனால் கூந்தல் உதிராமல், ஆரோக்கியமாக வளரும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பனங்கிழங்கு.. சீசனில் வாங்கி சாப்பிடுங்கள்..!

சென்னையில் டிஜிட்டல் கண் ஸ்ட்ரெய்ன் நோயாளி உச்சிமாநாடு! - டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை ஏற்பாடு!

உடற்பயிற்சி செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய 6 வழிமுறைகள்..!

வைட்டமின் டி குறைபாட்டால் எலும்புகள் பிரச்சனை ஏற்படுமா?

இரவில் தூக்கம் வரவில்லையா? என்னென்ன செய்ய வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments