Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நகங்களைப் பராமரிக்க இதோ சில எளிய டிப்ஸ்!

Webdunia
திங்கள், 11 ஜூன் 2018 (18:40 IST)
நகங்கள் அழகாக இருக்க நகங்களை சரியான முறையில் பராமரிக்க வேண்டும். நகங்கள் எளிதில் உடைவதற்கு இரும்பு மற்றும் கால்சியம் போன்ற சத்துக்குறைபாடுகளே காரணம். எனவே நகங்கள் ஆரோக்கியமாக வளர ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் உணவு பொருட்களைச் சாப்பிட வேண்டும்.

 
சிலருக்கு நகம் கடினத் தன்மையுடன் இருப்பதால், நகத்தை வெட்டுவதற்கு கஷ்டமாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் குளித்தவுடன் நகம் வெட்டினால், நகம்  ஈரத் தன்மையுடன் இருப்பதால், எளிதாக வெட்ட வரும். அதே போல், தேங்காய் எண்ணெய் தடவி சிறிது நேரம் கழித்து வெட்டினாலும் எளிதாக வெட்டலாம். 
 
நெயில் பாலீஷ் ரிமூவரை அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது நகத்திற்கு தீங்கு விளைவிக்கும். நெயில் பாலீஷ் ரிமூவருடன், சிறிது கிளிசரின் கலந்து பயன்படுத்துவது நல்லது. 
 
ஈரமாக இருக்கும் போது ஷேப் செய்தால், நகங்கள் உடைவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, நகங்கள் ஈரமாக இருக்கும்போது ஷேப் செய்வதை தவிருங்கள். 
 
கிளிசரின் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து நகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், நகங்கள் பளபளப்பாக இருக்கும். மேலும் பாதாம் எண்ணெயை  நகங்களில் பூசி சிறிது நேரம் கழித்து, கடலை மாவினால் கழுவினால் நகம் பொலிவுடன் காணப்படும். மாதத்திற்கு ஒரு முறை இப்படி செய்தால் நல்ல பலன்  கிடைக்கும். 
 
மிதமான சூடுள்ள பாலில் பஞ்சை நனைத்து நகங்களைத் தேய்த்து சுத்தப்படுத்தினால், நகங்களில் காணப்படும் அழுக்குகள் நீங்கி நகங்கள் சுத்தமாகும்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுபானத்திற்கும் மறதிக்கும் தொடர்பு உண்டா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

வெந்தயம், கருஞ்சீரகம் சர்க்கரையை கட்டுப்படுத்தும் என்பது உண்மையா?

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

வேர்க்கடலை சாப்பிடுவதால் என்ன நன்மைகள்?

அடுத்த கட்டுரையில்
Show comments