Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சின்ன வெங்காயத்தை பயன்படுத்தி தலைமுடி பிரச்சினைகளுக்கு தீர்வு !!

Webdunia
பலருக்கும் தலைமுடி உதிர்வு பிரச்சினையாக உள்ளது. இதை தீர்க்க வெங்காய ஹேர்பேக்கினை எப்படி செய்வது என்றும், அதனை எப்படிப் பயன்படுத்துவது என்று  தெரிந்து கொள்வோம்.

வெள்ளை வெங்காயம், சிவப்பு வெங்காயம், சாம்பார் வெங்காயம் மூன்றிலுமே ஒரே மாதிரியான மருத்துவக் குணங்கள் உள்ளன. இது, கால்சியம், வைட்டமின் பி6,  வைட்டமின் சி, சல்ஃபர் போன்ற சத்துக்கள் நிறைந்தது. குறிப்பாக, சாம்பார் வெங்காயத்தில் சல்ஃபர் மற்றும் கால்சியத்தின் அளவு அதிகம்.
 
முடி வளர்ச்சிக்கும், நுனி முடி பிளவுபடாமல் இருப்பதற்கும் சீரான ரத்த ஓட்டம் அவசியம். வெங்காயத்தில் உள்ள சல்ஃபர், நம் ரத்த ஓட்டத்தைச் சீர்செய்து,  முடியின் வேர்களுக்கு உறுதியை அளித்து, முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது. வெங்காயம் சிறந்த ஆன்டிபயாடிக்காகவும் செயல்படுகிறது.
 
தேவையான பொருட்கள்: வெங்காயம் - 2, மயோனைஸ்- 3 ஸ்பூன், தயிர் - 25 மில்லி.
 
செய்முறை: வெங்காயத்தினை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அடுத்து வெங்காயத்துடன் நீர் சேர்த்து மிக்சியில் போட்டு ஜூஸ் எடுத்துக் கொள்ளவும். அதனுடன் தயிர் மற்றும் மயோனைஸ் சேர்த்து 15 நிமிடங்கள் ஊறவிட்டுப் பயன்படுத்தவும்.

இந்த வெங்காய ஹேர்பேக்கினை தலைமுடியில் அப்ளை செய்து 30  நிமிடங்கள் ஊறவிட்டு சீயக்காய் கொண்டு அலசினால் தலைமுடி உதிர்வுப் பிரச்சினை தீர்வுக்கு வரும்.

தொடர்புடைய செய்திகள்

தண்ணீர் குறைவாக குடிப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

பெண்கள் மேம்பாட்டுக்கான "அன்பு" என்ற புதிய சேவை! சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் தொடக்கம்!

கோடை வெயிலில் தாக்கும் ஹீட் ஸ்ட்ரோக்! பாதுகாப்பாக இருப்பது எப்படி?

வெயில் நேரத்தில் மயக்கம் வருவது ஏன்?

அக்னி நட்சத்திர வெயில் நேரத்தில் என்னவெல்லாம் செய்ய கூடாது?

அடுத்த கட்டுரையில்
Show comments