Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சருமத்தை பராமரிக்க உதவும் சில டிப்ஸ் !!

Webdunia
வியாழன், 24 மார்ச் 2022 (13:16 IST)
முகத்தைக் கழுவும் போது, அதிக சூடாகவோ அல்லது அதிக குளிர்ச்சியுடனோ இருக்கும் நீரைப் பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் இவை சருமத்தில் வறட்சியை ஏற்படுத்தும். ஆகவே மிதமான நிலையில் உள்ள நீரைப் பயன்படுத்தியே முகத்தைக் கழுவ வேண்டும்.


குளிர்காலத்தில் தினமும் 2 முறை ஃபேஷ் வாஷ் பயன்படுத்தியும், அதுவே கோடைக்காலமாக இருந்தால் மூன்று முறையும் ஃபேஷ் வாஷ் பயன்படுத்தி முகத்தை கழுவ வேண்டும். முக்கியமாக கழுவிய பின் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்த வேண்டும். மேலும் ஃபேஷ் வாஷ் பயன்படுத்திய உடனே வெயிலில் செல்லக்கூடாது. அதுமட்டுமின்றி, முகம் கழுவிய பின்னர் சிறிது நேரம் கழித்தே சன் ஸ்க்ரீன் லோசனைப் பயன்படுத்த வேண்டும்.

முகத்தில் உள்ள அழுக்குகள் போக வேண்டுமென்று முகத்தை கடுமையாக தேய்த்து கழுவக்கூடாது. மேலும் கழுவி முடித்த பின் மென்மையாக முகத்தை துடைக்க வேண்டும்.

மேக்கப்பை நீக்க ஃபேஷ் வாஷைப் பயன்படுத்தக் கூடாது. அதற்கு மேக்கப் ரிமூவர் அல்லது நல்ல மாய்ஸ்சுரைசர் பயன்படுத்தியே நீக்க வேண்டும். அப்படி மேக்கப்பை நீக்கிய பின் ஃபேஷ் வாஷ் பயன்படுத்தி முகத்தைக் கழுவவும். சிலர் கிளின்சர், டோனர், மாய்ஸ்சுரைசர் போன்ற செயல்களைப் பின்பற்றுவார்கள். ஆனால் இது அனைவருக்குமே பொருந்தும் என்று சொல்ல முடியாது. சிலருக்கு இந்த செயல்கள் அலர்ஜியைக் கூட ஏற்படுத்தலாம்.

சிலருக்கு கெமிக்கல் பொருட்கள் பிடிக்காது. அத்தகையவர்கள் தயிர் அல்லது பால் பயன்படுத்தி முகத்தை சுத்தம் செய்யலாம். அதற்கு தயிர் அல்லது பாலை முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் பஞ்சுருண்டையை நீரில் நனைத்து முகத்தை துடைத்து எடுக்க வேண்டும். குறிப்பாக இந்த செயலுக்கு பின் சோப்பை முகத்திற்கு பயன்படுத்த கூடாது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சோம்பை உணவில் சேர்த்து கொள்வதால் ஏற்படும் பயன்கள்..!

பிரைடு ரைஸ் சாப்பிடுவதால் உடல்நலத்திற்கு ஏற்படும் தீங்குகள்..!

உடலுக்கு தேவையான புரதச் சத்துக்கள் உணவுகள் என்னென்ன?

காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் உடல்நல பிரச்சனைகள் என்னென்ன?

ஆஸ்துமா நோய் ஏற்படுவது ஏன்? குணப்படுத்த என்ன வழிகள்?

அடுத்த கட்டுரையில்
Show comments