முகச்சுருக்கத்தை நீக்க எளிமையான சில குறிப்புகள் !!

Webdunia
சந்தனப்பவுடருடன் பன்னீர், கிளிசரின் சேர்த்து பேஸ்ட் போல் குழைத்து முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு இரு முறை செய்துவர முகச் சுருக்கம் நீங்கும்.
 

புளிவாழைப்பழத்தை பிசைந்து அதனுடன் பயத்தம் மாவு போன்றவற்றை கலந்து முகத்தில் தேய்க்க முகம் பொலிவு பெறும். பப்பாளிப் பழத்தை நன்றாக அரைத்து அத்துடன் சில துளிகள் பால் மற்றும் பாதாம் எண்ணெய் சேர்த்து முகத்தில் பூசலாம்.
 
ஒரு கிண்ணத்தில் 1/2 டீஸ்பூன் சந்தனப் பவுடர், 1 டீஸ்பூன் வெள்ளரிக்காய் சாறு அல்லது பேஸ்ட் மற்றும் 1/2 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சில நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். பின் சாதாரண நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இந்த மாஸ்க்கைவாரத்திற்கு 2 முறை பயன்படுத்த நல்ல பலன் கிடைக்கும்.
 
ஆரஞ்சு தோலை நன்றாக காயவைத்து அதை அரைத்து மாவாக்கி பெஸ்ட் போல் பயன்படுத்தலாம் இவ்வறு ச்ய்தால் முகம் சுருக்கம் நீங்கும் முக பொலிவும் பெறும்.
 
சந்தனப் பவுடரை பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின், கழுவ வேண்டும். இதனால் முகத்தில் உள்ள அழுக்குகள் வெளியேற்றப்பட்டு, முகம் பொலிவோடு இருக்கும்.
 
கற்றாழை ஜெல்லில் 1 டேபிள் ஸ்பூன் சந்தனப் பொடியை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் முகத்தில் தடவி உலர வைத்துக் கழுவவேண்டும். இதனால் வெயிலால் பாதிக்கப்பட்ட சருமம் குணமாகும்.
 
சந்தனப் பவுடர் மற்றும் மஞ்சள் தூளை ஒன்றாக கலந்து, அதை பால் அல்லது தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி காய வைத்து கழுவ, முகம் பிரகாசமாக இருக்கும்.
 
ஓட்ஸ் மாவுடன் சந்தனப் பவுடர் மற்றும் பால் கலந்தோ அல்லது வெள்ள விதையை நன்றாக அரைத்து அத்துடன் பன்னீர் கலந்தோ முகத்தில் பூச சுருக்கம் மறையும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தினம் ஒரு கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன? பயனுள்ள தகவல்..!

நீரிழிவு அதிகரிப்புக்குக் காரணம் என்ன? வெள்ளை உணவுகள் பற்றி ஆயுர்வேத மருத்துவர் விளக்கம்!

பிறப்புறுப்பில் அரிப்புக்கான முக்கிய காரணங்கள்: இந்த தவறை எல்லாம் செய்யாதீர்கள்..!

ஏடிஎம் ரசீது ஆண்களின் விந்தணுவை பாதிக்குமா? அதிர்ச்சி தகவல்..!

நடு இரவில் விழிப்பு வந்தால், பிறகு தூக்கம் வருவதில்லை. இந்தப் பிரச்சினையை எப்படிச் சரிசெய்வது?

அடுத்த கட்டுரையில்
Show comments