Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரும ஆரோக்கியத்திற்கு சில இயற்கை முறையிலான குறிப்புகள் !!

Webdunia
திங்கள், 7 பிப்ரவரி 2022 (10:05 IST)
சரும ஆரோக்கியத்திற்கும் அழகு தரக்கூடியவை. ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் கடலை மாவை எடுத்துக்கொண்டு, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.


பின்னர் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து முகத்தில் பூசி அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவி வந்தால் சருமம் மென்மையாகும்.

அழகை பேணிக்காப்பதில் கடலை மாவு முக்கிய பங்கு வகிக்கிறது. பொலிவிழந்த சருமத்தை இளைமையூட்ட இரண்டு ஸ்பூன் கடலை மாவில் சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும். பின்னர் முகத்தில் நன்றாக தடவி ஊற விடவும், நன்றாக உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் பளிச் என தோன்றும்.

குளிக்கும் போது கடலை மாவு பூசி குளித்தால் முகம் வழுவழுப்பாகும். சுருக்கம் ஏற்படாது. இளமையாக காட்சியளிக்கலாம். இரண்டு ஸ்பூன் கடலை மாவுடன், 2 ஸ்பூன் ரோஸ்வாட்டர், 4 ஸ்பூன் பால் சேர்த்து கலக்கி, பின்னர் நன்றாக முகத்தில் பூச வேண்டும். 10 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் சருமம் மென்மையாக இருக்கும். கடும் வெயிலில் சென்றாலும் முகம் கருக்காது.

சருமம் எண்ணெய் வழிந்து பிசு, பிசுப்பாக இருந்தால் அதற்கு கடலை மாவுடன் தயிர் சேர்த்து பேஷியல் போட்டால் முகம் அழகு பொலிவு பெரும். ஒரு கிண்ணத்தில் கடலை மாவை எடுத்து அதில் தயிர், எலுமிச்சை சாறு ஊற்றி நன்றாக கலந்து முகத்தில் தடவ வேண்டும். சில நிமிடங்கள் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் எண்ணெய் பசை நீங்கி முகம் பொலிவு பெறும்.

வெயிலில் அடிக்கடி செல்பவர்களுக்கு, சூரிய ஒளி பட்டு முகம் கருப்பாகும். தேங்காய் பால் 1 ஸ்பூன், கடலை மாவு ஒரு ஸ்பூன் எடுத்து இரண்டையும் கலந்து பசை போல பிசைந்து, பின்னர் முகத்தில் பூச வேண்டும். உலர்ந்ததும் கழுவ வேண்டும். வாரம் இரு முறை இப்படி செய்தால் முகம் பிரகாசமாக இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடற்பயிற்சி செய்தாலும் மாரடைப்பு வரும்.. காரணம் இதுதான்..!

மூட்டு வலி முதல் புற்றுநோய் வரை அனைத்தையும் குணமாக்கும் இஞ்சி..!

பித்தப்பை கல்லை இயற்கையாக அகற்றுவது எப்படி?

பற்களை சரியாக பராமரிக்காவிட்டால் மூட்டு வலி வருமா?

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments